மயிலாப்பூரில் ஆடிட்டரும், அவரது மனைவியும் கொல்லப்பட்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரட்டைக் கொலை குறித்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் கூறிய திடுக்கிடும் தகவல்கள்!
சென்னை, மயிலாப்பூரில் நகைகளுக்காக ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அவர்களை கொலை செய்த கார் ஓட்டுனர் லால் கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளியை ஆந்திர போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னையில் கொலை செய்துவிட்டு ஆந்திரா வழியாக தப்ப முயற்சித்தது தெரியவந்தது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட லால்கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளியி ரவியிடம் இருந்து 8 கிலோ தங்கம் மற்றும் 50 கிலோ வெள்ளி வெள்ளி நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆடிட்டர் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 10 வைர மூக்குத்திகள், பிளாட்டினம் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மயிலாப்பூர் வீட்டிலேயே தனித் தனியாக ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி 1 அனுராதாவை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
வீட்டில் ஏராளமான நகைகள் இருந்தது ஓட்டுநருக்கு தெரிய வந்த நிலையில், சாவி 2 இல்லாததால் அமெரிக்காவில் இருந்து தம்பதி வரும் வரை காத்திருந்து கொள்ளை.
கொலை குறித்து போலீஸ் அறியும் முன் நேபாளம் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர். சிசிடிவி காட்சி பதிவாகும் ஹார்ட் டிஸ்க்-களை கழற்றி எடுத்துச் சென்றனர்.
இருவரையும் கொலை செய்வதற்கு முன்பாகவே, ஆடிட்டரின் பண்ணை வீட்டில் உடல்களை புதைக்க பள்ளம் தோண்டி வைத்துள்ளனர்.
இரட்டைக் கொலை செய்துவிட்டு நகை, பணத்துடன் நேபாளம் தப்ப முயன்ற லால் கிருஷ்ணா, அவரது கூட்டாளி ரவி ஆந்திராவில் கைது.