தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது.
கீழத்தட்டப்பாறை உள்வட்டத்திற்குட்பட்ட முத்துசாமியாபுரம், வடக்குசிலுக்கன்பட்டி, அய்யனடைப்பு, இராமசாமிபுரம், முடிவைத்தானேந்தல் உள்வட்டத்திற்குட்பட்ட தளவாய்புரம், கூட்டுடன்காடு, பேரூரணி ஆகிய 7 கிராமங்களுக்கு
மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பட்டா 58, உட்பிரிவு பட்டா 4, முதியோர், விதவை உதவித்தொகை 5, இலவச வீட்டுமனைப்பட்டா 4, சான்றிதழ் கேட்டு 1 மனு என மொத்தம் 72 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
மேலும், கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் மாவட்ட ஆட்சித்தலைவரால் தணிக்கை செய்யப்பட்டது. ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடி தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, அறிவுறுத்தினார்
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.