கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்து மகா சம்மேளனத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததற்காக மலையாள மிஷன் கத்தார் கிளையின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் சிசுபாலன் துர்காதாஸ், முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக கத்தாரில் தனது பணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
https://twitter.com/gokulchan/status/1522155981349695488?t=FGQGF_nHY4lLSVDEfzoszw&s=19
Narang Projects Qatar இன் பிராந்திய இயக்குனரான Tim Morphy, மின்னஞ்சல் மூலம் அவருக்கு எதிராக எழுந்த புகார்களின் அடிப்படையில் அவரை பணிநீக்கம் செய்வதற்கான நிறுவனத்தின் முடிவை அறிவித்தார். நிறுவனத்தில் மூத்த கணக்காளராக துர்காதாஸ் பணியாற்றி வந்தார்.
அவர் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பு கருத்துக்களை வெளியிட்டதுடன் ,கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் வளைகுடா நாடுகளில் உள்ள தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக பணியமர்த்தப்படுவதாகவும் தெரிவித்து கத்தாரில் உள்ள செவிலியர்களை தரக்குறைவாக விமர்சித்தார்.
தாஸின் பேச்சுக்கு எதிராக கத்தாரில் உள்ள யுனிக் என்ற நர்சிங் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அவர் மீது கடுமையான நடவடிக்கையை கோரி கேரள முதல்வர் மற்றும் டிஜிபிக்கு புகார்கள் அனுப்பியுள்ளன.
அவரது இஸ்லாமிய வெறுப்பு மற்றும் பாலியல் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலான சில நாட்களுக்குப் பிறகு, தாஸ் மே 5 அன்று மலையாள மிஷனில் இருந்து நீக்கப்பட்டார், இது கேரள அரசின் கலாச்சாரத் துறையின் முயற்சியாகும்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 10-வது அனந்தபுரி இந்து மகா சம்மேளனத்தில் (கேரள இந்து மாநாடு) மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் தொடக்க உரை நிகழ்த்திய இடத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்கள் நிகழ்த்தப்பட்டன. முஸ்லீம்களின் வணிகங்களைப் புறக்கணிக்குமாறு பேச்சாளர்கள் இந்துக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், முன்னாள் மிசோரம் கவர்னரும் பாஜக தலைவருமான கும்மனம் ராஜசேகரன் புரவலராக கலந்து கொண்டார்.