தூத்துக்குடியில் தமிழக அரசின் ஓராண்டு நிறைவை கொண்டாட்டம்.!


மரக்கன்று நடுதல்- புகைப்பட கண்காட்சி - ஓராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா - மேயர்,ஆட்சியர்,ஆணையாளர்  பங்கேற்பு.!

தூத்துக்குடி தமிழக அரசின் முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் திரவியரத்தினம் நகர் பகுதியில்  நகர்புற அடர்காடுகள் வளர்ப்பு முறையில்


மியாவாக்கி மரம் நடும் நிகழ்வில் ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் 300 மரக்கன்று நட்டினார்கள். 


பின்னர் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் தயாரிக்கப்பட்ட தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட மேயர் ஜெகன் பெரியசாமி பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியால் பல்வேறு திட்டங்கள் வாயிலாக நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். 


நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், (திட்டம்) ரங்கநாதன் உதவி ஆணையர்கள் சேகர், ராமசந்திரன், 

மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார துறை அதிகாரி ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ்,

கவுன்சிலர்கள் ரெங்கசாமி, காந்திமணி, இசக்கிராஜா, கண்ணன், பொன்னப்பன், ராமர், கந்தசாமி, கனகராஜ், அதிஷ்டமணி, சரவணக்குமார், வைதேகி, எடின்டா, பவாணி மார்ஷல், விஜயகுமார், முத்துமாரி,

ராமுத்தம்மாள், மும்தாஜ், விஜயலட்சுமி, பச்சிராஜ், நாகேஸ்வரி, சந்திரபோஸ், ஜாக்குலின் ஜெயா, பேபி ஏஞ்சலின், கந்தசாமி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்ஷல். முத்துவேல், ஜெயசீலி, ஜெபஸ்டின் சுதா, ரிக்டா, மகேஸ்வரி, 

மரியகீதா, தனலட்சுமி, ராஜதுரை, ரெக்ஸின், சரண்யா, சுப்புலட்சுமி, கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, 

பகுதி செயலாளர் சிவகுமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், ராஜ்குமார்,  முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார், மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர் ஹரிகணேஷ், 

மாநகர திமுக மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர் மச்சாது, வட்ட செயலாளர் பொன்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், தாசில்தார் செல்வகுமார், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் 

நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மகேஸ்வரசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post