தூத்துக்குடி அண்ணாநகர் சலவை துறையினை கடந்த 1955-ம் ஆண்டு முதல் சலவைத் தொழிலாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், 2018-ம் ஆண்டு சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சலவை துறை புதுப்பித்து தருவதாகவும், அயனிங் கடைகள் கட்டி தருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
அதன்படி பணிகள் நடைப்பெற்று 80% முடிவடைந்த நிலையில், அயனிங் கடைகள் பொது டெண்டர் மூலம் ஏலம் விடப்படும் எனவும், பூங்கா அமைந்துள்ள பகுதியில் சலவை தொழிலாளர்கள் நுழைய அனுமதி இல்லை எனவும் மாநகராட்சி நிர்வாகம் வாய்மொழியாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டிக்கும் வகையில் சலவை தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் சலவை தொழிலாளர்கள் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியர்களிடம் பேசிய மாவட்ட தலைவர்
"சலவைத் தொழிலாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலங்கள், அயனிங் கடைகள் அனைத்து கடைகளையும் தொழிலாளர்களுக்கே வழங்க வேண்டும், பூங்கா வேலைகளை தடுத்து நிறுத்திட வேண்டும். இல்லாவிட்டால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.