மனைவி, இரு குழந்தைகளை ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட ஐ.டி. ஊழியர்!

 

பொழிச்சலூரில் மனைவி இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்த தந்தை தானும் தற்கொலை. கடன் பிரச்சனை காரணம் என தகவல் தெரிய வந்துள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் இஷ்டசித்தி விநாயகர் கோயில் தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழப்பு.  

தனியார் ஐடி நிறுவன ஊழியரான பிரகாஷ்(41), அவரது மனைவி காயத்திரி (39), 9வது படிக்கும் மகள் நித்யஸ்ரீ(13), 2வது படிக்கும் மகன் ஹரி கிருஷ்ணன் (8), ஆகியோரை அமேசானில் வாங்கிய மரம் அறுக்கும் ரம்பத்தால் கொலை செய்து விட்டு பிரகாஷ் தானும் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல். 

காயத்திரியின் தந்தை காலை வந்து பார்த்து விட்டு அனைவரும் இறந்து கிடந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

அதன் பேரில் சங்கர் நகர் போலீசார் நிகழ்விடத்திற்கு வந்த விசாரணை செய்தனர். 

கைரேகையை பதிவு செய்ய கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வீட்டுனுள் வந்து கைரேகையை பதிவு செய்தனர், தடயவியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். 

இறப்பதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளனர் அதில் (To whom so ever it may concern This is our me and my wife combined decision and no one is responsible for this act ), குடும்பத்தோடு சேர்ந்து எடுத்த முடிவு என குறிப்பிட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

கடன் தொல்லையால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இதன் பின்னர் நேரில் வந்து பார்வையிட்ட தாம்பரம் காவல் ஆணையர் ரவி பேசுகையில் கடிதம் எழுதி வைத்து விட்டு சுவற்றில் ஒட்டி விட்டு இறந்திருக்கிறார்கள். அதில் ஒன்றாக சேர்ந்து முழுவெடுத்தாகவும் யாரும் காரணமில்லை என குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார். 

எலக்ட்ரிக் ரம்பத்தை அமேசானில் வாங்கி 19ம் தேதி டெலிவரி ஆகியுள்ளது. 

செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அதை ஆய்வுக்கு உட்படுத்தி கடன் தொல்லை, மிரட்டல் இருக்கிறதா என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். 

தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர். 

முதற்கட்ட புலன் விசாரணையில் இரவு 11 மணிக்கு சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் சரியான நேரம் தெரியவரும். 

மயக்க மருந்துகள் உட்கொண்டு பின்னர் கொலை செய்திருஜ்க வாய்ப்புள்ளது. 

3.50 லட்சத்திற்கான கடன் பத்திரம் கிடைத்துள்ளது தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம் என பேட்டியளித்தார். 

தடவியல் துறையினர் ஆய்விற்கு பின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Previous Post Next Post