தேனி மாவட்டத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில்
இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஜூனியர் செஞ்சிலுவை சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் இன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாவட்ட கலெக்டர் முரளீதரன், கலந்துகொண்டு புரவலர்கள், மற்றும் சேவையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
உடன் இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் என்.ஆர்.டி.தியாகராஜன், துணைத்தலைவர் சி.ஜெயசந்திரன், இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஜுனியர் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி செய்தியாளர்
ரா.சிவபாலன்