மணிமங்கலம் அருகே திருமணமாகி ஓர் ஆண்டில் இளம் பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை


மணிமங்கலம் அருகே திருமணமாகி ஒராண்டில் இளம் பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு.பெண்ணின் தந்தை,மகளின் இறப்பில் சந்தேகம் என்று போலீசில் புகாா்- ஶ்ரீபெரும்புத்தூா் கோட்டாச்சியா் கணவா்,மாமியாா், மாமனாரிடம் விசாரணை.

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி செங்கழுநீா் அம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி (59). இவருடைய இளைய மகள்விஜயலட்சுமி (26). இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம்  மணிமங்கலம்அருகே வல்லாஞ்சேரி  கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன், சரளா தம்பதியரின் மகன் ராகுல் காந்தி (29).


விஜயலட்சுமி,ராகுல்காந்தி ஆகிய  இருவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் திருமணம் நடந்தது.அதன்பின்பு ராகுல்காந்தியின்   பெற்றோருடன் கூட்டுக்குடித்தனமாக வசித்து வந்தனா். இதற்கிடையே திருமணமானதிலிருந்தே விஜயலட்சுமியை மாமியாா்,மாமனாா் கொடுமைப்படுத்தியதாகவும்,கணவா் ராகுல்காந்தியும் அதை கண்டுக்கொள்ளது கிடையாது என்று கூறப்படுகிறது.

இந்திலையில்  ராகுல்காந்தி கடந்த 4 ஆம் தேதி  நந்திவரம் கூடுவாஞ்சேரியில் உள்ள மாமியார் மாரியம்மாவுக்கு போன் செய்து, உங்கள் மகள் விஜயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றுஎன்று கூறியுள்ளார். 

இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினா்  அலறி அடித்துக்கொண்ட  வல்லாஞ்சேரி சென்றுள்ளனர். அங்கு  மகளின் உடலை பார்த்த பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். எனது மகள் இறப்பில்  சந்தேகம் இருக்கிறது. என் மகள் திருமணம் ஆனதிலிருந்தே  மாமியாா்,மாமனாா், கணவா் ஆகியோா் என்மகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.அதோடு வரதட்சனை கேட்டும் துண்புறுத்தியுள்ளனா்.என் மகள் தற்கொலை செய்யுமளவு கோழை அல்ல.எனவே என் மகள் இறப்பிற்கு காரணமான  அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தாா். 

இதை அடுத்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆகியுள்ளதால், இது பற்றிய விசாரணையை ஶ்ரீபெரும்புத்தூா்  கோட்டாட்சியர்க்கு  பரிந்துரை செய்துள்ளனர்.

கோட்டாட்சியர் விசாரணை அறிக்கை மற்றும் விஜயலட்சுமியின்  பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிலையில் சந்தேகத்திற்கிடமான மரணம் என்று நாங்கள் வழக்குப்பதிவு செய்துள்ளோம் என்று போலீஸ் தரப்பில் கூறுகின்றனா்.

Previous Post Next Post