தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் வக்கீல் வீரபாகு, வெற்றிச்செல்வன், வக்கீல் மந்திரமூர்த்தி, முன்இருக்கையில் அமர்ந்து கொண்டனர். அகர வரிசை படி உறுப்பினர்களுக்கு இருப்பிடம் ஓதுக்கப்பட்டுள்ளது.
மண்டல தலைவர்கள் 4 பேர் முன்வரிசையில் இடமளிக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்களுக்குரிய இடத்தில் அமரும்படி மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டார். அதன்படி அவர்களது இடத்திற்கு சென்றனர்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி நகர் நல அலுவலர் மூலம் ஹோலிகிராஸ் பள்ளி அருகிலிருந்த ஆரம்ப சுகாதார மையம், சத்திரம் பகுதியில் மாற்றப்பட இருந்ததை மீண்டும் பழைய இடத்திலேயே அமைப்பதற்கும்
சிவந்தாகுளம் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிகம் இருப்பதால் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு எதிரில் உள்ள உப்பு இலாக்காவிற்கு சொந்தமான மத்திய அரசு இடத்தை கனிமொழி எம்.பி மூலம் 10 ஏக்கர் கேட்டு பெற்றுக்கொள்வது
வீட்டுத்தீர்வை சம்மந்தமாக வெப்சைட் இணையதளம் ஆரம்பிக்கப்பிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் கருத்துகளை பதிவு செய்து கொள்ளலாம்.
மாநகராட்சி பகுதியில் 60வது வார்டுகளிலும் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் முழுமையாக சீரமைத்து மழைநீர் தேங்காதபடி பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான வி.இ. ரோடு, பாளை ரோடு (இராஜாஜி பூங்கா), ஜெயராஜ் ரோடு, அண்ணாநகர் பிரதான சாலை, சிதம்பரநகர் பிரதான சாலை, திருச்செந்தூர் ரோடு (தெற்கு காவல் நிலையம் முதல் காமராஜர் கல்லூரி வரை நடைபாதையில்
நிறுத்தம் செய்யப்படும் இரு சக்கர , நான்கு சக்கர வாகனங்களுக்கு முறையே ரூ.5 மற்றும் ரூ.10 வசூலிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இம்மாநகராட்சிக்குப் பாத்தியப்பட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் காலியிடத்தில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி நிறுத்தம் செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் வகையிலும்
இம்மாநகராட்சி வருவாயைப் பெருக்கும் வகையிலும் அபராத கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.50/ வசூலித்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து அதிமுக எதிர்க்கட்சி தலைவரும் 35 வார்டு கவுன்சிலர் வீரபாகு தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து கூட்ட அரங்கில் மேயர் உதவியாளர் ரமேஷ், 35 தீர்மானங்களை வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டனர்.
தீர்மானங்கள்
1. தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் அனுமதித்த கட்டுமானங்கள் அனுமதிக்கப்பட்ட அவரை படத்திற்கும் ஆறுதலாக கட்டி வரும் கட்டிடங்களின் மீது புதிய அறிவிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும் ஆக்கிரமிப்புகளை தண்டிலிருந்து அறிவிப்பு வழங்கி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும்
2. தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஐம்பத்தி 7வது வார்டில் சந்தன மாரியம்மன் கோவிலுக்கு குடிநீர் இணைப்பு வழங்குமாறு அருகே உள்ள பகுதியை சேர்ந்த பொது மக்கள் அளித்துள்ள கோரிக்கை வரப்பெற்று மரிய மைக்கேல்ராஜ் என்பவரும் கிரையம் பெயரிடப்பட்டுள்ளது
3. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டலத்தில் ஜெயராஜ் சாலை பண்டு கரிசாலை மற்றும் மூன்றாம் ரயில்வே மேம்பாலம் அருள்ராஜ் மருத்துவமனை சந்திப்பில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரவுண்டானா மாநகராட்சியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீரூற்று பசுமை அழகுபடுத்த உருவாக்குதல் மற்றும் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரிப்பு செய்து விடவும் நிறுவனத்தினர் கோரியுள்ளனர்
4. தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் உள்ளடக்கியதாகும் மனசு பூத்திட்ட பொது சுகாதார திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள போதிய நிரந்தர துப்புரவு பணியாளர்கள் இல்லாத நிலையில் தற்போது அவர் செய் ஒப்பந்த புள்ளி அடிப்படையில் தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்
5.தூத்துக்குடி மாநகராட்சி பொது சுகாதார பணி திடக்கழிவு மேலாண்மை கழிவு நீர் அகற்றும் பணிகளுக்காக பல்வேறு வகையான 170 வாகனங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தினமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது அதன் பயன்பாடு தொடர்ச்சியாக இருப்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு அதை சரிசெய்யும் வகையில் உத்தேச செலவினம் ஆக 80 லட்ச ரூபாய் பொது நிதியிலிருந்து செலவு செய்திட அனுப்பி வைக்கப்படுகிறது
6. கொரோனா நோய் மற்றும் புற்று மீண்டும் பரவும் அபாயம் இருப்பதாலும் அதற்காக தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான மருத்துவ மற்றும் களப் பணிகளில் உதவி புரிய தற்காலிக மருத்துவர்கள் நியமனம் செய்தல்
7.தூத்துக்குடி மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கான ஊதியம் வழங்க மற்றும் பொது சுகாதார பணிக்காக அவசர அவசியம் கருதி ஒப்பந்தப்புள்ளி கோரும் பணியாளர்களை கொண்டு தினக்கூலி ஆனது மூன்று மாதத்திற்கு 75 லட்ச ரூபாய் செலவு ஆகும்
8. தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு 375 ரூபாய் தினக்கூலியாக கொடுக்கப்படுகிறது தற்போது 436 ரூபாயை கொடுப்பதற்காக கூடுதலாக ஊதியம் வழங்க வேண்டியுள்ளது
9.தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி சேகரமாகும் திடக் கழிவுகள் மக்கும் கழிவுகளை தவிர்த்து மற்ற கழிவுகள் மாநகராட்சிக்கு சொந்தமான தருவைகுளம் கடலோர கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது மேற்படி குப்பைகளை ஒரே இடத்தில் சீரான முறையில் குதிக்கும் பணிகளையும் மாநகராட்சியில் சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி மேற்கொள்ளும் பொது சுகாதார பிரிவு சம்பந்தமான பணிகள் மேற்கொள்ளவும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதற்கான உத்தேச செலவான தொகை மாதமொன்றுக்கு 2 லட்சம் முதல் 3 மாதத்திற்கு 6 லட்சம் தொழிலிலிருந்து நடத்தப்படுகிறது
10. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அலுவலக பணி நிமித்தமாக சென்னை மற்றும் இதர வெளியூர்களுக்குச் சென்று அதற்கான பயண தொகை மற்றும் இதர படிகளை சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு உடனுக்குடன் வழங்குவது தொடர்பாக
11. மாநகராட்சியில் சாலை பணிகள் மேற்கொள்ளுதல் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல் மழை நீர் வடிகால் அமைத்தல் போன்ற பணிகளுக்கு 910.40 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளுதல்
12. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் தனியார் ஆம்னி பேருந்து நிலையம் பேருந்துக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 50 ரூபாய் நுழைவு கட்டணம் செய்திட தொடர்பாக
13. தூத்துக்குடி மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறஞர்களாக செயல்படும் ஆனந்தகுமார் காலநீட்டிப்பு செய்யவேண்டி
14. தூத்துக்குடி மாநகராட்சி மாவட்ட நீதிமன்ற நியமனம் செய்யப்பட்ட கோமதி மணிகண்டன் காலநீட்டிப்பு செய்யவேண்டி
15. தூத்துக்குடி மாநகராட்சி சீராக குடிநீர் வினியோகம் செய்ய ஏதுவாக கடந்த ஆண்டு ஏற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக 4 பணியிடங்கள் நிரப்பவும் அதற்கான உத்தரவை செலவினம் 8.50 லட்சத்திற்கு மாமன்றம் அனுமதி வேண்டி
16. தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள் நகர சுகாதார செய்தியில் ஆகியோர்களுக்கு தலா 1,000 வீதம் 14 நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு சீருடை பணியாளர் 1800 வீதம் 5 சுகாதார செவிலியர்களுக்கு 9000 ஒரு வருடத்திற்கு 23 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டிற்கு 46 ஆயிரம் பகுதி மற்றும் நகர சுகாதார சேவைகளை வழங்கவும் மேற்படி தொகையை மாநகராட்சி பகுதிகளில் இருந்து செலவு செய்ய வேண்டி
18. தூத்துக்குடி மாநகராட்சிக்கு ஆரம்ப சுகாதார மையங்களில் 7 நகர்ப்புற சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளது தற்போது அவை தற்காலிகமாக பணியாற்றிய தொடர்பாக
19. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு உற்பத்தி செய்வதற்கும் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களில் எரிபொருள் செலவு தொடர்பாக 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு ஒரு வருடத்திற்கு உத்தேச செலவு தொகை ரூபாய் 375 லட்சம் ஆகும்
20. சொத்துவரி புது சீராய்வு 2022 சம்பந்தமாக பொதுமக்களின் ஆசிரியர்கள் மற்றும் ஆலோசனைக் தெரிவிக்க கோரி நாளிதழில் விளம்பரம் செய்ததில் எந்த ஒரு தகுதியான ஆசைகள் எதுவும் பொதுமக்களும் வரப்படவில்லை எனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 60 வார்டுகளில் அமைந்துள்ள மண்டல வாரியாக சொத்துவரி சீராய்வு செய்திட தொடர்பாக
21. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் தெருவிளக்குகள் பராமரிக்கும் பணியினை செய்யும் பணியாளர்களை கால நீட்டிப்பு செய்வது தொடர்பாக
22. தூத்துக்குடி மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட ஜெயராஜ் நோட்டில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது அதில் மாநகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்திட 16 கடைகளையும் ஒப்பந்தப்புள்ளிகள் பொது ஏலம் விடப்படுகிறது
23. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள முத்துநகர் கடற்கரையில் தற்போது சீர்மிகு நகரத் திட்டத்தில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வழியில் இந்நிலையில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டி
24. தூத்துக்குடி மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட ஜெயராஜ் ரோட்டில் சிறு திட்டத்தின் கீழ் பல அடுக்கு வாகனம் நிறுத்தும் பயன்படும் நிலைக்கு கொண்டுவரும் முகமாக மாநகராட்சி வருவாயைப் பெருக்கும் வகையிலும் அங்கே நிறுத்தப்படும் இருசக்கர வாகனத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு 5 ரூபாயும் நான்கு சக்கர வாகனம் இரண்டு மணி நேரத்திற்கு பத்து ரூபாயாக நிர்ணயம் செய்யப் படுகிறது
25. தூத்துக்குடி மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட பழைய பேருந்து பேருந்து நிலையத்தில் 59 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களின் நிலுவைத் தொகையை வசூலிப்பது தொடர்பாக
26. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ஈரோடு பழைய ரோடு ஜெயராஜ் ரோடு அண்ணா நகர் பிரதான சாலை சிதம்பர நகர் பிரதான சாலை திருச்செந்தூர் ரோடு தெற்கு காவல் நிலைய முதல் காமராஜ் கல்லூரி வரை நடைபாதையில் நிறுத்தம் செய்யப்படும் வாகனங்களுக்கு இருசக்கர வாகனத்திற்கு ஐந்து ரூபாய் நாணயம் நான்கு சக்கர வாகனத்திற்கு பத்து ரூபாய் நிர்ணயம் செய்யப்படுகிறது
27. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அறிவிக்கப்படும் குறிப்பிட்ட சாலைகள் வசந்தகால இடத்தில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதிக்கின்ற நிறுத்தம் செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் அவருக்கு 50 ரூபாய் வசூல் செய்த இடம் மட்டும் அனுமதி கோரியுள்ளது
28. தூத்துக்குடி வாஉசி சென்னையில் உள்ள கடைகளுக்கு நாளொன்றுக்கு ஒரு சதுர அடிக்கு 50 பைசா வீதம் மாத வாடகை நிர்ணயம் செய்திட வேண்டி
29. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலத்தில் தார் சாலை அமைக்கும் பணி 46 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது
30. தூத்துக்குடி மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தில் உட்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணி 29 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது
31. தூத்துக்குடி மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தில் உட்பட்ட பகுதிகளில் தார்சாலை அமைக்கப்படும் பணி 41.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.
32. தூத்துக்குடி மாநகராட்சி மேயருக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணி 39.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது
33. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தூத்துக்குடி மீளவிட்டான் நிலையத்துக்கும் இடையே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக ரயில்வே துறைக்கு கடிதம் எழுத வேண்டி
34. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அவர்களுக்கு மாநகராட்சி நடைபெற்றுவரும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட அவளுக்குத் தனியான வாகனம் ஏற்பாடு செய்திட வேண்டி
35. தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மன்றத்திற்கு உட்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்த நிலையில் அவர்களுக்கு நிலுவைத் தொகையான 7 லட்சத்து 4 ஆயிரத்து 700 ரூபாய் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்
கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், உதவி ஆணையர் சேகர், ராமசந்திரன், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி திலகராஜ்,
பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதரகுழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக்குழு தலைவர் அதிஷ்டமணி, நகர அமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், மற்றும் கவுன்சிலர்கள் சரண்யா, பேபி ஏஞ்சலின், ரெங்கசாமி, கண்ணன், விஜயலட்சுமி, ரெக்ஸ்லின்,
தனலட்சுமி, சரவணக்குமார், ஜாக்குலின் ஜெயா, மெட்டில்டா, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், இசக்கிராஜா, கந்தசாமி, பொன்னப்பன், ராமர், மரியகீதா, மகேஷ்வரி, சந்திரபோஸ், எடின்டா, கற்பககனி, மும்தாஜ். ராமுத்தம்மாள், ராஜேந்திரன், விஜயகுமார், பாப்பாத்தி, வைதேகி, முத்துமாரி, பவாணி மார்ஷல், கனகராஜ், முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.