திருப்பூர் தடகள சங்கம் சார்பில் சீனியர் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகள்.. மாணவ-மாணவிகள் அசத்தல்

 திருப்பூர் தடகள சங்கம் நடத்தும் முதலாமாண்டு சீனியர் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகள்  திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது.

 தொடக்க விழாவிற்கு திருப்பூர் தடகள சங்க தலைவரும், தமிழ்நாடு மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவருமான  ஆர்.பி.ஆர்.சண்முகசுந்தரம்   தலைமை  தாங்கினார். திருப்பூர் வாலிபால் அசோசியேசன் தலைவரும், திருப்பூர் சிலம்ப அசோசியேசன் தலைவரும், தமிழ்நாடு வாலிபால் அசோசியேசனின் துணை சேர்மனுமாகிய ரங்கசாமி  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.  டூ வின் எக்ஸ்போர்ட்ஸ் கருணாநிதி, டெக்னோ ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குநர் சந்தீப்குமார்,  ஐ.பி.எக்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிரஞ்சன், டெக்ஸான் எக்ஸ்போர்ட்ஸ்  மதிவாணன், அபிராமி கலர்ஸ்  வெங்கடேசன், வடிவேல் நிட் பிராஸஸ்  ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார். 

திருப்பூர் தடகள சங்க மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களையும், விழாக்குழுவினர்களையும் தலைவர் சண்முகசுந்தரம்  சிறப்பித்தார். நடுவர்களுக்கான சீருடைகள் வழங்கப்பட்டன.

உடுமலை அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் மனோகர் செந்தூர், ஐ வின் ட்ராக் ஸ்போர்ஸ் கிளப் அழகேசன், காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார், உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர் பலர் பணியாற்றினர். 

பங்குபெற்ற அனைவருக்கும் காலை-மதிய உணவு வழங்கப்பட்டது. 

இந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு: 

  100 மீட்டர் ஓட்டத்தில் கரண் முதலிடத்தையும், கண்ணன் இரண்டாம் இடத்தையும், சுபாஷ் மூன்றாமிடத்தையும் பெற்றனர். 

200 மீட்டர் ஓட்டத்தில் சங்கர் முதலிடமும்,  ஜானேஷ்வரன் இரண்டாமிடமும்,   கண்ணன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

400 மீட்டர் ஓட்டத்தில் விஷ்ணு ஸ்ரீ முதலிடமும், ராஜ்குமார் இரண்டாமிடமும்,  சிவ சூர்யா மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

800 மீட்டர் ஓட்டத்தில் ராஜ்குமார் முதலிடமும், இனியன் இரண்டாமிடமும்,  ரமேஷ் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

நீளம்தாண்டுதல் போட்டியில் சங்கர் முதலிடமும்,  விக்னேஷ்  இரண்டாமிடமும், மிதிலேஷ் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

குண்டு எறிதல் போட்டியில்  மதன்குமார் முதலிடமும்,  முத்து  இரண்டாமிடமும், கெளதம் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

வட்டு எறிதல் போட்டியில்  செபின் குமார் முதலிடமும்,  மதன்குமார் இரண்டாமிடமும்,  வெங்கட் பாலாஜி மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

உயரம் தாண்டுதல் போட்டியில் திருபாகரன் முதலிடமும்,  ரமேஷ் இரண்டாமிடமும், சிவபாலன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

மும்முறை தத்தி தாண்டுதல் போட்டியில்  தனபாலன் முதலிடமும்,  சிவ சூர்யா இரண்டாமிடமும்,  சுகந்தன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

ஈட்டி எறிதல் போட்டியில் சந்திர முகிலன் முதலிடமும், லிசான் இரண்டாமிடமும், முத்து மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

1500 மீட்டர் ஓட்டத்தில் தீபக் முதலிடமும், இனியன் இரண்டாமிடமும், ஜெய் மணிகண்டன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

5000 மீட்டர் ஓட்டத்தில் சிவசக்திவேல் முதலிடமும், ஸ்ரீ தரணீஷ், இரண்டாமிடமும்  தினகரன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அஷ்வின் முதலிடமும், கரண் இரண்டாமிடமும், ராமச்சந்திரன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில்  ராகுல் முதலிடமும், ராமச்சந்திரன் இரண்டாமிடமும், விஷ்ணு மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

போல் வால்ட் (கழியூன்றி தாண்டும் போட்டி) போட்டியில் இசக்கி முத்து முதலிடமும், லிசான் இரண்டாமிடமும், திருபாகரன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில்  துரோணா அகாடமி முதலிடமும், ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். 

4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் துரோணா அகாடமி முதலிடமும், கருடா ஸ்போர்ட்ஸ் கிளப் இரண்டாமிடமும், ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

சிறந்த வீரருக்கான விருதில் கரண் முதலிடமும்,  சங்கர் இரண்டாமிடமும், விஷ்ணு ஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனர். 

பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:

100 மீட்டர் ஓட்டத்தில் தீபிகா முதலிடமும், சர்விகா  இரண்டாமிடமும், லிதன்யா  மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

200  மீட்டர் ஓட்டத்தில்  லிதன்யா முதலிடமும்,  ரம்யா  இரண்டாமிடமும்,  ஹேமா  மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

400 மீட்டர் ஓட்டத்தில் ஸ்ரீ வர்த்தினி முதலிடமும்,  பவித்ரா  இரண்டாமிடத்தையும் பெற்றனர்.

800 மீட்டர் ஓட்டத்தில் பவித்ரா முதலிடமும், வினுப்பிரியா  இரண்டாமிடமும், மோகனாம்பாள்  மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

நீளம் தாண்டுதல் போட்டியில்  தீபிகா முதலிடமும், சர்விகா  இரண்டாமிடமும், மோகனாம்பாள்  மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

குண்டு எறிதல் போட்டியில் பரமேஸ்வரி முதலிடமும், வினுப்பிரியா  இரண்டாமிடமும்,  ஹேமா  மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

வட்டு எறிதல் வினுப்பிரியா முதலிடமும், சத்யா  இரண்டாமிடமும், ரதி பிரியா  மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

ஈட்டி எறிதல்  போட்டியில்  பரமேஸ்வரி முதலிடமும்,  சத்யா  இரண்டாமிடமும், ரதி பிரியா  மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

400 மீட்டர் ஓட்டத்தில் ஸ்ரீ வர்த்தினி முதலிடத்தை பெற்றார்.

சிறந்த வீராங்கனை விருதில் ஸ்ரீ வர்த்தினி முதலிடமும், தீபிகா  இரண்டாமிடமும்,  சர்விகா மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

வருகிற 13, 14, 15 ஆகிய தேதிகளில், கோயம்புத்தூர் நேரு விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான போட்டிகள்   நடைபெறவுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலிருந்து தேர்வுபெறும் வீரர்கள்- வீராங்கனைகளுக்கு திருப்பூர் தடகள சங்கம் & டெக்னோ ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் விளையாட்டு சீருடைகள், காலணிகள் போன்றவைகள் வழங்கப்படவுள்ளது. 

மேலும்,  மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள, பெற்றோர்கள் இல்லாத ஏழை குழந்தைகள் & மாற்றுத்திறனாளர்கள் யாரேனும் தடகளத்தில் பயிற்சி பெற விரும்பினால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்பதை திருப்பூர் தடகள சங்க தலைவர் ஆர்.பி.ஆர். சண்முகசுந்தரம்  தெரிவித்தார்.

Previous Post Next Post