தூத்துக்குடியில் உலக செவிலியர் தின விழா - சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு விருது வழங்கினார் ஆட்சியர் செந்தில்ராஜ்.!


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்,  தலைமையில் இன்று  நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசுகையில்

கொரோனா காலத்தை கடந்து மீண்டு வந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் செவிலியர்கள். கொரோனா காலத்தில் 1900 செவிலியர்களை நியமித்து போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தி சாதனை படைத்துள்ளோம். 


தமிழக அரசு மருத்துவ துறையில் ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வரப்போகிறது. அதை செவிலியர்களை வைத்துதான் செய்யப்போகிறது. எனவே உங்கள் சேவை தேவைப்படுகிறது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் அவர்கள் உலகிலேய முதல் நர்சிங் பள்ளியை இங்கிலாந்தில் ஆரம்பித்தார்கள். 

அதனை மாடர்ன் நர்சிங் என்று சொல்லுகிறோம். 1907ம் ஆண்டு அவர்களின் 90 வயது வரை நர்சிங் தொழில்தான் பார்த்தார்கள். அவர்களை போல் உங்கள் பணி சிறக்க வேண்டும் என உங்களை பாராட்டுகிறேன்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா காலத்தில் செவிலியர்களாகிய நீங்கள் இரவும் பகலும் அயராது உழைத்ததை நான் கண்கூடாக கண்டேன். உங்களிலும் பலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையிலும் கொரேனவை எதிர்த்து போரிட்டு 

மீண்டும் பணியில் சேர்ந்து பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரைப்போல் தியாக மனப்பான்மையோடு பணிபுரிந்து வருவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளை அணுகி அவர்களுக்கு முதல்முதலாக உதவி செய்வது செவிலியர்கள்தான் என்பதை குறிப்பிடத்தக்கது. சேவிலியர்களின் பணியானது தன்னலமற்ற அர்ப்பணிப்பான பணி. 

இப்பணியில் ஈடுபடும் அனைவருக்கும் என்னுடைய உங்கள் செவிலியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என  பேசினார்.


அதனைத்தொடர்ந்து 35 மற்றும் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு சிறந்த சேவைக்கான விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்,  வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு, உறைவிட மருத்துவர் மரு.சைலேஷ்ஜெபமணி, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர், மூளை தண்டுவட நரம்பியல் மருத்துவர் மரு.ராஜாவிக்னேஷ், 

துணை கண்காணிப்பாளர் மரு.குமரன், செவிலியர் கண்காணிப்பாளர் முத்துலட்சுமி, தலைவர் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் தூத்துக்குடி கிளை ஹெப்சி ஜோதிபாய், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சுப்புலெட்சுமி, செவிலியர் கண்காணிப்பாளர் அமுதாராணி, நர்சிங் கல்லூரி பேராசிரியர் பிளாரன்ஸ், பேராசிரியர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post