பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தற்போதைய தலைவர் ஜி.கே.மணி தலைமையில் தொடங்கியது. இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.