மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வி.சி.க ஆர்ப்பாட்டம்.!


பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையின்மை -வெறுப்பு அரசியல், ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து  தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி , சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை கைவிட்டு, விலை உயர்வுகளை மொத்தமாக திரும்பப் பெற்றிட வேண்டும்,


பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாய விலை கடைகளில் வழங்கிட வேண்டும், வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 வழங்கிட வேண்டும், 

ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும், வேலை வாய்ப்பை பெருக்கிட வேண்டும், நகரப்புற வேலை உறுதி சட்டம் கொண்டு வர வேண்டும்,

வேலையில்லா கால நிவாரணம் அளிப்பதற்கான மத்திய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அரசுத்துறையில் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு  சிபிஐ மாவட்ட செயலாளர் கரும்பன், விசிக மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால், ஆகியோர் தலைமை வகித்தனர். சிபி எம் சார்பில் மாநகர் செயலாளர் தா.ராஜா, ஒன்றிய செயலாளர் கே.சங்கரன்,

புறநகர் செயலாளர் பா.ராஜா, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சண்முக ராஜ், சிபிஐ சார்பில் மாநகர் செயலாளர் தனலெட்சுமி, ஒன்றிய செயலாளர் ஜெபக்கணி ஞான சேகர், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் செல்வன், விசிக சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் ஆட்டோ கணேசன், மாவட்ட பொருளாளர் ஆறுமுக நயினார், மாவட்ட அமைப்பாளர் சுலைமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post