தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என தீர்மானம்.!


தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் தலைமையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில்

திமுக கழகத்தை தோற்றுவித்த அண்ணா மறைவுக்குபின் அவர் வழி தொட்டு இயக்கத்தை கட்டிக்காத்தவர் கலைஞர். இயக்கத்திற்கு பல்வேறு சோதனைகள் வந்த போது எல்லாம் அதை தகர்த்தெறிந்தவர் 

13 முறை சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர் 5 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றி பல்வேறு திட்டங்களை தந்து தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்தி காட்டியவர் கலைஞர். வருகின்ற ஜூன் 3ம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் 99வது பிறந்த நாளையொட்டி

தெற்கு மாவட்டத்தில் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக அலுவலகங்கள், சார்பு அணிகளின் அலுவலகங்கள் மற்றும் அனைத்து கிளை பகுதிகளிலும் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

மேலும் அனைத்து கிளைப் பகுதியிலும் ஒலிபெருக்கி அமைத்து கழக கொடியேற்றி ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தொடர்ந்து கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பை மிக சிறப்பாக நிறைவேற்றி இளைஞர்கள் மத்தியில் புது எழுச்சியை ஏற்படுத்தி வரும் இளைய தளபதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை தங்களது தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இணைத்திட வேண்டுமென கழக தலைவரை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 


Previous Post Next Post