கடந்த சில மாதங்களாக டெல்லி அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தியாகராஜ் மைதானத்திலிருந்து வீரர்களும், பயிற்சியாளர்களும் இரவு 7 மணிக்கே கட்டாயமாக வெளியேற்றப்படுவதாக புகார்கள் எழுந்தது. அவர்களது கூற்றுப்படி, மைதானத்தில் இருந்து அனைவரையும் வெளியேறியபிறகு, டெல்லியின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) சஞ்சீவ் கிர்வார்,மற்றும் அவரது மனைவி ரிங்கு துக்கா ஆகியோர் தனது நாயுடன் இரவு 7.30 மணியளவில் வாக்கிங் வருவதாக குற்றச்சாட்டினர்.
இதுகுறித்து பயிற்சியாளர்கள் "எப்போதும் இரவு 8 முதல் 8.30 மணிவரை, லைட் வெளிச்சத்தில் பயிற்சி செய்வோம். ஆனால், தற்போது 7 மணிக்கே மைதானத்தை விட்டு வெளியேற வற்புறுத்தப்படுகிறோம். அதன்பிறகு, அதிகாரி ஒருவர் அவரது நாயுடன் வாக்கிங் செல்கிறார். எங்களது அன்றாட பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார். இந்த செய்தி சமூக ஊடகங்களிலும், தினசரி நாளிதழ்களிலும் செய்தியாக வந்ததையடுத்து இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டது.
விசாரனையில் குற்றச்சாட்டில் உண்மையை கண்டறிந்த உள்துறை அமைச்சகம், கணவர் சஞ்சீவ் கிர்வார் (1994) பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி ரிங்கு துக்கா (1994 பேட்ச்)
ஐஏஎஸ் உள்ளிட்ட இருவரையும் முறையே லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு டெல்லியிலிருந்து இடமாற்றம் செய்துள்ளது உத்தரவு பிறப்பித்துள்ளது.