கோபிசெட்டிபாளையம் அடுத்த சின்னட்டிபாளையம் பகுதியில் காதல் மனைவியே. கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கொன்று விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த அரசூர் குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார் இவரது காதல்மனைவி மகேஸ்வரி.
இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்த கௌரிசங்கர் உடன் மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளகாதலாக மாறியுள்ளது. கள்ளக்காதல் குறித்த விஷயம் மகேஸ்வரியின் கணவர் லோகநாதனுக்கு தெரியவரவே மகேஸ்வரியை கணவர் லோகநாதன். பலமுறை கண்டித்துள்ளார். இதுகுறித்து மகேஸ்வரி கள்ளக்காதலன் கௌரிசங்கரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் இணைந்து லோகநாதனை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை லோகநாதன் மகேஸ்வரியை வழக்கம்போல் தனியார் நிறுவனத்திற்கு வாகனத்தில் அழைத்து கொண்டு விட சென்றுள்ளார். அப்போது கௌரிசங்கர் மகேஸ்வரியின் கணவர் லோகநாதனை நிறுவனத்துக்குள் அழைத்து சென்று தனது நண்பர்கள் இருவர் உதவியுடன் நான்கு பேரும் இணைந்து லோகநாதனை கல்லால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து திங்கட்கிழமை மதியம் தனியார் நிறுவனத்தின் வேனில். லோகநாதனின் உடலை எடுத்து கொண்டு பங்களாபுதூர் அடுத்த சின்னட்டிபாளையம் பகுதியில் உடலை வீசி எறிந்துவிட்டு அவர் சென்ற வாகனத்தையும் உடலோடு கீழே தள்ளிவிட்டு லோகநாதன் விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடியுள்ளனர். அதன்பின் லோகநாதன் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டனர். இந் நிலையில் லோகநாதனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்ட பங்களாபுதூர் காவல்துறையினர் நேற்று லோகநாதன் விபத்தில் இறக்கவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டு கொலைக்கு உடந்தையாக இருந்த லோகநாதனின் மனைவி மகேஸ்வரி அவரது கள்ளக்காதலன் கௌரி சங்கர் மற்றும் இரண்டு நண்பர்கள் என மொத்தம் 4 பேரை பங்களாபுதூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனையே கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.