இலங்கை முழுவதும் கலவரம் வெடித்துள்ள நிலையில் குருனாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 4-வது முறையாக போராட்டக்காரர்கள் நுழைய முயற்சிதனர், ராஜபக்சேவின் வீட்டின் மீது தாக்குதல் நடந்தியவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தது போலீஸ்
மகிந்த ராஜபக்ச , இலங்கையின் பிரதம மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற பெருகிவரும் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் திங்களன்று ராஜினாமா செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஹம்பாந்தோட்டாவில் உள்ள ராஜபக்சேக்களின் மூதாதையர் இல்லம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது .
ஹம்பாந்தோட்டை நகரின் மெதமுலனவில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது இளைய சகோதரரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் வீடும் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்ததை காணொளி காட்சிகள் காட்டுவதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அம்பாந்தோட்டை, மெதமுலானவில் மஹிந்த மற்றும் கோட்டாபயவின் தந்தையின் நினைவாக நிர்மாணிக்கப்பட்ட டி.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபியையும் ஒரு கும்பல் அழித்ததுடன், குருநாகலிலுள்ள பிரதமர் மஹிந்தவின் இல்லமும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
#Rajapaksa | #SriLankaprotest