வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச குடி மனை பட்டா வழங்கிட கோரியும், நீண்டகாலமாக புறம்போக்கு நிலத்திலும் வறண்ட நீர்நிலை புறம்போக்கு பகுதியில் குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க கோரியும், கோவில் நிலங்களில் நீண்ட நாட்களாக குடியிருக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட கோரியும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவில்பட்டி, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாநகர் செயலாளர் தா.ராஜா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கே.சங்கரன், புறநகர் செயலாளர் பா.ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ரசல், ஆர்.பேச்சிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சொ.மாரியப்பன், எம்.எஸ்.முத்து, உள்ளிட்ட பொது மக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டங்களில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.