தூத்துக்குடி :குடியிருப்பு பகுதிகளில் விதி மீறி கேஸ் சிலிண்டர் குடோன் - தடுத்து நிறுத்தக்கோரி மேயரிடம் மாமன்ற உறுப்பினர் மனு.!

இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமியிடம் தூத்துக்குடி மாநகராட்சி 10வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் பத்மாவதி நேரில் அளித்த கோரிக்கை மனுவில்..

"10வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் 8வது தெரு குடியிருப்பு கட்டிடமாக இருந்து தற்போது இடித்து ஓரு கேஸ் கம்பெனி குடோன் வர இருப்பதாக அறிகிறோம். கிருஷ்ணராஜபுரம் முத்துகிருஷ்ணாபுரம் மாணிக்கபுரம் பூபால்ராயர்புரம் ஆகிய பகுதிகள் சுமார் 5ஆயிரம் குடியிருப்புகள் உள்ளடக்கிய பகுதியாகும். 

இந்த இடத்தில் கேஸ் கம்பெணி குடோன் கட்டப்பட்ட விதம் மிகவும் ஆபத்தானது. குடோன் கட்டப்பட்டுள்ள விதம் கட்டிட விதிகளுக்கு மீறியதாக உள்ளது. கட்டிடத்தை சுற்றிலும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டினால் கட்டப்பட்டுள்ளது. மேல் கூரையும் ஏசி ஷீட்டினால் அமைந்துள்ளது. இதனால் அதிக வெப்பம் உள்ளடக்கினால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இக்குடோனுக்கு மிக அருகில் திருமண மண்டபம், ஆசிரியர் பயிற்சி கல்லூரி புரோட்டா கடைகள் மெடிக்கல் மற்றும் பள்ளிக் கூடங்கள் உள்ளன. மெயின் பாதை மினிபஸ் செல்லும் நெருக்கடியான பாதையாக உள்ளது. ஆகவே  இந்த இடம் கேஸ் கம்பெணி அமையக்கூடிய தகுதிகளுடன் இல்லை. இது கட்டிட விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டு கட்டப்பட்டுள்ள கட்டிடம் ஆகும். ஆகும் ஆகவே இதனை நேரில் பார்வையிட்டு கேஸ் கம்பெணி குடோன் அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நிகழ்வின் போது அதிமுக வடக்கு பகுதி துணைச்செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செண்பகச்செல்வன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், இம்மானுவேல், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனிருந்தனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post