தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி - உத்தரபிரதேசம் அணி கோப்பையை வென்றது.!*


வெற்றி பெற்ற அணியினருக்கு கனிமொழி கருணாநிதி எம்பி பரிசு வாங்கினார்

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சார்பில் நடத்தப்பட்ட ஹாக்கி இந்தியாவின் 12-ஆவது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் அமைந்துள்ள செயற்கை புல் ஹாக்கி மைதானத்தில் கடந்த 17/05/2022 அன்று துவங்கி நடைபெற்று வந்த நிலையில்  


நேற்று, மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் உத்திரபிரதேசம் சண்டிகர் அணிகள் மோதின இதில் உத்திரபிரதேசம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது


2வது இடத்தை சண்டிகர் அணி கைப்பற்றியது. 3வது மற்றும் 4வது இடத்திற்கு அரியானா ஒடிசா அணிகள் விளையாடின இதில் அரியானா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது விழாவில் போட்டியின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சுழல் கோப்பையை மற்றும் பரிசுகளை வழங்கினார் 


முன்னதாக கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 350-க்கும் அதிகமான சிறுவர்களுக்கு ஹாக்கி மட்டை வழங்கி, முன்னாள் ஹாக்கி வீரர்களை கவுரவித்தார்.


நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதாஜீவன், மெய்யநாதன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, கே ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே ஆர் அருணாச்சலம், கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி,

திமுக ஒன்றிய செயலாளர் முருகேசன், யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ்,மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், 


ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொது செயலாளர் (பொறுப்பு)செந்தில்ராஜ்குமார் பொருளாளர் ராஜராஜன், துணைத்தலைவர் சங்கிலிகளை, இணைச்செயலாளர் திருமால்வளவன், துணைச் செயலாளர் காமராஜ், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குருசித்ரசண்முகபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post