குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் மாவட்ட எஸ்பி ஆய்வு


குடியாத்தம் மே 06 வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் திருவிழா முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் எஸ் ராஜேஷ் கண்ணன் வியாழன் கிழமை அன்று இரவு கெங்கையம்மன் கோவிலில் ஆய்வு செய்தார் 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் உள்ள கெங்கையம்மன் திருவிழாவையொட்டி மே 14ஆம் தேதி தேர் திருவிழாவும் முக்கிய விழாவாக மே 15ஆம் தேதி அம்மன் சிரசு ஊர் நகரத்தின் வழியாக வலமும் நடைபெற உள்ளது 

அம்மன் சிரசு திருவிழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் மக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் பாதுகாப்பு பணியில் காவல்துறையினரை ஈடுபடுத்துவது கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அவர் ஆய்வு மேற்கொண்டார் 

ஆய்வு செய்யும் போது காவல் துணை கண்காணிப்பாளர் கே. ராமமூர்த்தி குடியாத்தம் போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரமூர்த்தி நகர காவல் ஆய்வாளர் லட்சுமி காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Previous Post Next Post