“பட்டின பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது; இதுபோல் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் ஒரு அமைச்சரும் சாலையில் நடக்க முடியாது” என மன்னார்குடி இராமானுஜ ஜீயர் தமிழக அமைச்சர்களுக்கு பகிரங்க மிரட்டல்.
தருமபுரம் ஆதீனத்திற்கு பட்டினப் பிரவேசம் நட்த்த மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
பட்டினப் பிரவேசம் நடத்துவதற்கு , மடாதிபதியை பல்லக்கில் ஏற்றி பக்தர்கள் தோளில் சுமந்து செல்வது வழக்கம்.
இந்த நடைமுறை மனித உரிமை மீறல் என்று கூறி, மே 22ஆம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை வருவாய்க் கோட்ட அலுவலர் ஜே.பாலாஜி தடை உத்தரவை பிறப்பித்தார்.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள மன்னார்குடி இராமானுஜ ஜீயர் தமிழக அமைச்சர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Mannargudi #RamanujaJeeyar #DharmapuramAdheenam #PattinaPravesam