கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி - கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி சாம்பியன்.!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி பிரிவு சார்பாக தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆண்கள்  ஹாக்கி லீக் போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் வைத்து கடந்த  2  நாள்களாக நடைபெற்று வந்தன. இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. நேற்று லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி,  இலுப்பையூரணி ஹாக்கி அணி,திட்டங்குளம் பாரதி ஹாக்கி அணி, தாமஸ் நகர் ஹாக்கி அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன

இன்று காலையில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணியினரும் இலுப்பையூரணி ஹாக்கி அணியும் மோதின. இதில் 5 - 0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி திட்டங்குளம் பாரதி ஹாக்கி அணியினரும், தாமஸ் நகர் ஹாக்கி அணியும் மோதின. இதில் 4 -1என்ற புள்ளி கணக்கில் தாமஸ் நகர் ஹாக்கி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இதனை தொடர்ந்து இன்று மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணியும், தாமஸ் நகர் ஹாக்கி அணியும் மோதின. இதில் 7 - 1 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.மேலும்  மண்டல அளவிலான நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இறுதி போட்டியில் முருகன்,  கார்த்திக் ராஜா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு  கூடைப்பந்து பயிற்சியாளர் ரத்தினராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் குரு சித்ரா சண்முக பாரதி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா. கருணாநிதி கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். இதில் திமுக ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் , தொழில் அதிபர் சுபாஷ் பில்டர்ஸ் சண்முகராஜா, காளிமுத்து பாண்டிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி ஹாக்கி பயிற்சியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post