நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நிலக்கரி பிரச்சினை. வேலைவாய்ப்பு பிரச்சினை. பணவீக்க பிரச்சினை. ஒருகாலத்தில் உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்த நாட்டை எப்படி அழிப்பது என்பதற்கு, பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால தவறான நிர்வாகமே சாட்சி என குறிப்பிட்டுள்ளார்.