உபி :ஷாஜஹான்பூரில் பெண்ணை கும்பல் பலாத்காரம் செய்து வீடியோ வெளியிட்ட கொடுரம்.! - போலீஸ் விசாரனை.!

ஷாஜஹான்பூர் (உ.பி):30 வயதுடைய பெண் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கொடுர கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளதாக  போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

ஏப்ரல் 22 ஆம் தேதி, ஐந்து பேர் தன்னை வீட்டின் வெளியே உள்ள குடிசைக்குள் இழுத்துச் சென்று மாறி மாறி பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

பெண்ணின் புகாரின் அடிப்படையில் சனிக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (நகரம்) சஞ்சய் குமார் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர், அந்தச்செயலை படம்பிடித்து, சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு வீடியோவை பொது வெளியில் பதிவிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பியோடி உள்ளனர், அவர்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஏஎஸ்பி கூறினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post