கோவில்பட்டியில் மாவட்ட ஹாக்கிபோட்டி தொடக்கம்.!

கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில், தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நேற்று தொடங்கியது. தொடக்க விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி பேட்ரிக் தலைமை வகித்தார்.

போட்டியை மாவட்ட கூடைப்பந்து பயிற்சியாளர் ரத்தினராஜ் தொடங்கி வைத்தார். வீரர்களை கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி ஆக்கி பயிற்சியாளர் முத்துக்குமரன், மாவட்ட ஆக்கி கழகச் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி பிரிவு சார்பாக தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆண்கள்  ஹாக்கி லீக் போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் வைத்து  2  நாள்கள் நடைபெறுகிறது. இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

நேற்று முதல் போட்டியில் பாண்டவர்மங்கலம் தந்தை ஞானமுத்து ஹாக்கி அணியும், கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. .இதில் 1- 0 என்ற கோல் கணக்கில் பாண்டவர்மங்கலம் அணியினர் வெற்றி பெற்றனர்.

2வது போட்டியில் கோவில்பட்டி அசோக் நினைவு ஹாக்கி அணியும், கோவில்பட்டி பாரதி நகர் ஹாக்கி அணியும் மோதின. இதில் 5 - 0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி அசோக் நினைவு ஹாக்கி அணி வெற்றி பெற்றது.

3வது போட்டியில் திட்டங்குளம் பாரதி ஹாக்கி அணி மற்றும் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழக ஹாக்கி அணியும் மோதின. இதில் 5 - 0 என்ற கோல் கணக்கில் திட்டங்குளம் பாரதி ஹாக்கி அணி வெற்றி பெற்றது.

4வது போட்டியில் இலுப்பையூரணி மற்றும் பாண்டவர்மங்கலம் ஹாக்கி அணியினர் மோதின. இதில் 4 - 0 என்ற கோல்கணக்கில் இலுப்பையூரணி அணி வெற்றி பெற்றது. 

5வது போட்டியில் தாமஸ் நகர் ஹாக்கி அணி மற்றும் பாண்டவர்மங்கலம் தந்தை ஞானமுத்து அணியும் மோதின. இதில் 3 - 1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றன.  

6வது போட்டியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி மற்றும் அசோக் நினைவு ஹாக்கி அணி மோதின. 8 -0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்றது. 

இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் சிறப்பு விளையாட்டு விடுதி அணியினரும் இலுப்பையூரணி ஹாக்கி அணி விளையாட உள்ளனர் . இரண்டாவது அரையிறுதிப் போட்டி திட்டங்குளம் பாரதி ஹாக்கி அணியினரும் தாமஸ் நகர் ஹாக்கி அணி  விளையாட உள்ளனர். நாளை மாலை 4 மணியளவில் இறுதி போட்டி நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியினர் மண்டல அளவிலான நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவர்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post