பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத அரசு பதவி விலக கோரி ஒரு மாத காலமாக முகாமிட்டு போராட்டம் நடத்துவோர் மீது இன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் திடீரென தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டகாரர்கள் அமைத்திருந்த கூடாரங்களையும் ராஜபக்சே ஆதரவாளர்கள் தீ வைத்து எரித்தனர். இதனைத் தொடர்ந்து இலங்கையில் நாடு தழுவிய போலீஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மஹிந்தா ராஜபக்சே பதவி விலகியுள்ளார். ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொழும்பு மற்றும் மேற்கு மாகாணங்களில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை, இலங்கை முழுவதும் உடனே அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.