இலங்கை கலவரம் - இலங்கைக்கு செல்லாமல் தூத்துக்குடிக்கு திருப்பி விடப்பட்ட கானா நாட்டு கண்டெய்னர் கப்பல்.!

இலங்கையில் பல்வேறு இடங்களில் தொடர் வன்முறை ஏற்பட்டதை அடுத்து அனைத்து ரயில்களும் ரத்து  செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் மறு உத்தரவு வரும் வரை இன்று இயக்கப்பட்டு வரும் ரயில்கள் அந்தந்த இடங்கள் வரை மட்டும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 4 ஆயிரம் கண்டெய்னர்களுடன் கானா நாட்டின் தேமா துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் ஏப்ரல் 20-ல் கிளம்பிய MSC REGINA சரக்கு கப்பல், நாளை இலங்கை செல்லவிருந்த நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக, இலங்கை செல்லாமல் இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்திற்க்கு வந்தடைந்தது.

இது குறித்து துறைமுக அதிகாரிகள் மற்றும் சரக்கு பெட்டக முகவர்கள் தரப்பில் கூறுகையில்.., கடந்த மாதம் ஏப்ரல் 20ம் தேதி கானா நாட்டின் தேமா துறைமுகத்திலிருந்து முந்திரிக் கொட்டைகள் அடைக்கப்பட்ட சுமார் 4000 சரக்கு பெட்டிகளை (TEUs) ஏற்றிக் கொண்டு கிளம்பிய M/v MSC REGINA என்ற கப்பல் அதன் திட்டமிடப்பட்ட இலக்கான கொழும்பு துறைமுகத்தை நாளை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தூத்துக்குடிக்கு வர வேண்டிய 1044 (TEUs) சரக்கு பெட்டிகளும், கொச்சின் துறைமுகம் செல்ல வேண்டிய சரக்கு பெட்டிகளும் இருந்தன.

இந்நிலையில் இலங்கையில் நேற்றிரவு அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையால் ஏற்பட்டுள்ள கொந்தழிப்பான சூழலை கருத்தில் கொண்டு அங்கு செல்வது , சரக்கு பெட்டிகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை பெரிதும் தாமதப்படுத்தும் என்பதால் தூத்துக்குடிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு தென் இந்தியாவில் உள்ள துறைமுகங்களான , சென்னை, தூத்துக்குடி, கொச்சின் துறைமுகங்களுக்கு வர வேண்டிய சரக்கு பெட்டகங்கங்கள் பெரிய கப்பல்களில் கொழும்பு துறைமுகம்  வந்து சரக்குகளை இறக்கிச் செல்லும். பின்னர் அங்கிருந்து Feeder Vessel எனப்படும் சிறிய கப்பல்களில் தூத்துக்குடி உள்ளிட்ட மற்ற துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில் வழக்கம் போல கொழும்பு துறைமுகத்திற்க்கு சென்று இறக்க திட்டமிடப்பட்ட  M/v MSC REGINA கப்பல், அதன் திட்டமிட்ட பாதையை மாற்றி, இன்று காலை தூத்துக்குடிக்கு நேரடியாக வந்து 1044 (TEUs) சரக்கு பெட்டிகளை இறக்கியது. இன்று, அல்லது நாளை அது இங்கிருந்து கொச்சின் துறைமுகத்திற்கு செல்லும் என்றும், இதன் மூலம் தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச சரக்கு பெட்டி முனையமாக மாறும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர்.

#SriLanka | #SriLankaCrisis | #SriLankaProtests | #trains #colombo #ColomboPort #tuticorin #tuticorinport

Ahamed

Senior Journalist

Previous Post Next Post