தேனி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மாவட்ட கலெக்டர் ஆய்வு .!*


தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட  கலெட்டர் க.வீ.முரளீதரன் நேரில் ஆய்வு.

நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு, உள்புற நோயளிகளுக்கான படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் பெட்டகங்களில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை, பெட்டகங்கள் வழங்கபட்ட தாய்மார்களின் எண்ணிக்கை  இருப்பும் மற்றும் வழங்கப்படும் விபரங்கள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

மேலும் பரிசோதனை மேற்கொள்ள வருகை தந்த கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட கலெக்டர் முரளீதரன், வழங்கினார். இந்த ஆய்வின் போது, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா,வட்டாட்சியர் அர்ஜுனன் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Previous Post Next Post