கோவில்பட்டி அருகே உடம்பில் சேரை பூசிக்கொண்டு வினோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சோழபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த செவ்வாய் கிழமை தொடங்கி மூன்று நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக திருவிழா கொண்டாடப்படாத நிலையில் இந்த ஆண்டு ஊர் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளியூரிலிருந்து பக்தர்கள் வருகை புரிந்தனர். 


வருடாவருடம் திருவிழாவின்போது பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக சிறுவர்கள், பெண்கள்,ஆண்கள் என பாகுபாடில்லாமல் அனைவரும் உடம்பில் சேரை பூசிக்கொண்டு  குளக்கரையில் இருந்து கிளம்பி தெருக்களில் வீதி உலா வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.



அதேபோல் இந்த ஆண்டும் பக்தர்கள் உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு கைகளில் வேப்பிலை ஏந்தி பய பக்தியுடன் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

Previous Post Next Post