தமிழகத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் புதிய பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார். அதில், மாநில துணை தலைவராக இருந்த நயினார் நாகேந்திரனுக்கு சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில துணை தலைவராக சசிகலா புஷ்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மாநில நிர்வாகிகள் பட்டியல் - 2022. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்... பணி சிறக்க வாழ்த்துக்கள்.” என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
வெளியிடப்பட்டுள்ள பட்டியல்.