இது குறித்து அமமுக 30 ஆவது வார்டு, வட்டச் செயலாளர் காசிலிங்கம் மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்துள்ள மனுவில்...
"தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட டூவிபுரம் பகுதிகளில் பல வருடங்களாக தன்பாடு உப்பு திருமண மண்டபம், கனிபேலஸ், சந்திரா மஹால், KSPS நாடார் திருமணமண்டபம், கைலாஸ் மஹால் போன்ற திருமண மண்டபம் செயல்பட்டு கொண்டுருக்கிறது. ஆனால் எந்த திருமண மண்டபத்திற்கும் கார், டூவிலர் பார்க்கிங் வசதி இல்லை. அது மட்டும் இல்லாமல் J.N.டெக்ஸ்டைல், சின்னத்துரை & Co, போன்ற நிறுவனங்களுக்கும் போதுமான கார் பார்க்கிங் வசதி இல்லை. இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
பொது மக்கள் வாகனம் நிறுத்த வழி இல்லாமல் பரிதவிக்கிறார்கள். இதை குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மூன்று முறை மனு அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமண நிகழ்ச்சி நடந்தால் டூவிபுரம், மணிநகர் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. வாகனத்திலும் செல்ல முடியவில்லை.
ஆகையால் இதற்கு தீர்வு கான நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இனிமேலும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்து கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.