பஞ்சாப் தேர்தலுக்கு முன் காங்கிரஸில் இணைந்த பிரபல பஞ்சாபி பாடகரும், ராப் பாடகருமான சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்பட்டார்.
மூஸ் வாலா காங்கிரஸ் சார்பில் மான்சா தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அவரை ஆம் ஆத்மி கட்சியின் டாக்டர் விஜய் சிங்லா 63,323 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மான்சா மாவட்டத்தில் உள்ள மூசா என்ற கிராமத்தைச் சேர்ந்த மூஸ் வாலா கடந்த ஆண்டு நவம்பரில் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் காங்கிரஸில் சேர்ந்தார்.