"கொழும்பு துறைமுகம் செல்ல வேண்டாம், " - தூத்துக்குடி, சென்னை, கொச்சி, மும்பை துறைமுகங்கள் வழியாக சரக்கு பெட்டிகளை கையாள எக்ஸிம் அமைப்பு கோரிக்கை.!

இலங்கையில் நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு செவ்வாய்க்கிழமை சரக்கு நடவடிக்கை முழுமையாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் நிச்சயமற்ற நிலைமையால், தெற்கிலிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் (EXIM) தங்கள் வணிகம் தடையின்றி நடக்க மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து கேரள எக்ஸிம் அமைப்பு தங்களது அனைத்து உறுப்பினர்களையும், கொச்சி துறைமுகம் -ஜவஹர்லால் நேரு துறைமுகம், மும்பை அல்லது கொச்சி துறைமுகம்- முந்த்ரா துறைமுகம் அல்லது சென்னை-துபாய் வழியாக தங்கள் ஜெபல் அலி மற்றும் மேற்கு ஆசிய நாட்டிற்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகளை  அனுப்புமாறு கேரள ஏற்றுமதியாளர்கள் மன்றம் தங்களது உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளது. மேலும் தூர கிழக்கு நாடுகளுக்கு செல்லும் சரக்குகளை தூத்துக்குடி அல்லது சென்னை துறைமுகங்கள் வழியாக அனுப்புமாறு தங்களது உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளது.

கொல்லம் துறைமுகத்தில் இருந்து 10 மீட்டருக்கும் அதிக ஆழம் கொண்ட ஃபீடர் கப்பல் சேவைகளை இயக்குமாறு கேரள கடல்சார் வாரியம் மற்றும் துறைமுக அமைச்சரிடம் எக்ஸிம் அமைப்பு கேட்டுக் கொண்டது. உடனடி நடவடிக்கையாக கொல்லம் துறைமுகத்தில் பணியாளர்கள் நடமாடுவதற்கு மின்னணு தரவு பரிமாற்றம் (EDI) வசதிகள் மற்றும் ICP (குடிவரவு சோதனைச் சாவடிகள்) ஏற்பாடு செய்யுமாறு வாரியம் வலியுறுத்தியுள்ளது..

இது குறித்து கேரள எக்ஸிம் அமைப்பின் செயலாளர் முன்ஷித் அலி கூறுகையில், கொழும்பு துறைமுகத்தில் செவ்வாய் மாலையில் திடீர் அறிவிப்பு மூலம் நிறுத்தப்பட்ட நடவடிக்கைகள், புதன்கிழமை மாலைக்குள் 

மீண்டும் தொடங்கிய போதிலும், கொழும்பில் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலையில் கொழும்பு துறைமுகத்தின் வழியாக சரக்குகளை அனுப்புவதில் ஆபத்து உள்ளது.

இலங்கை கப்பல் முகவர்கள் சங்கம் இலங்கை துறைமுக சபையின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் செவ்வாய்க்கிழமை தனது செயற்பாடுகளை நிறைவு செய்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை விட்டு வெளியேற முடியாமல் பெரும் தாமதமானதை  சுட்டிக்காட்டியுள்ளது. தாமதமாக புறப்படுவதன் விளைவு, கப்பல் போக்குவரத்துக்கு பெரும் நிதி இழப்பு, அட்டவணை படி செல்ல முடியாத நேர இழப்பு, சரக்குகளை தாமதமாக வழங்குதல் மற்றும் பிற துறைமுகங்களில் நிறுத்தம் (Birth) கிடைக்காமல் போகும் நிலை உண்டாகிறது " என்றார். 

இரு தினங்களுக்கு முன் இலங்கைக்கு சென்று சரக்கு பெட்டிகளை இறக்க வேண்டிய கானா நாட்டிலிருந்து கிளம்பிய MSC Regina கப்பல் கொழும்பு துறைமுகம் செல்லாமல் நேரடியாக தூத்துக்குடி வந்து சரக்குகளை இறக்கியது. இதன் மூலம் திட்டமிடப்பட்ட 10 நாட்களுக்கு முன்பே சரக்குகள் வந்து சேர்ந்தன.

கொழும்பில் நடந்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருந்து கொழும்புக்கு வந்த தாய்க் கப்பல் தற்போது கொச்சி துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அது கொச்சி துறைமுகம் வந்து சேரும் என்று கொச்சி துறைமுக வட்டாரங்கள் தெரிவித்தன. 

கொச்சி துறைமுகம் ஆண்டுக்கு ஒரு மில்லியன் சரக்கு பெட்டிகளை (TEUs)  கையாளும் திறனைக் கொண்டுள்ளது, அதேசமயம் இந்திய EXIM வர்த்தகர்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் மூன்று மில்லியன் சரக்கு பெட்டிகள் (TEUs) கொழும்பு துறைமுகம் வழியாக அனுப்பப்படுகின்றன.

கேரள கடல்சார் வாரியத்தின் தலைவர் என்.எஸ்.பிள்ளை கூறுகையில், கொல்லம் துறைமுகத்தில் குடியேற்ற சேவைகளை தொடங்குவதற்கான திட்டத்தை உள்துறை அமைச்சகத்திடம் வாரியம் ஓரிரு நாட்களில் சமர்ப்பிக்கும் என்றார். "நாங்கள் ஏற்கனவே துறைமுகத்தில் ஆறு குடிவரவு சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளோம், அனுமதி கிடைத்ததும், துறைமுகமானது மற்ற முக்கிய துறைமுகங்களுக்கு Feeder கப்பல் சேவைகளை வழங்குவதோடு, பணியாளர்கள் பரிமாற்றத்தையும் எளிதாக்கும்" என்று பிள்ளை கூறினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post