தூத்துக்குடி மாதாநகர் சந்தனமாரியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவையொட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிகுட்பட்ட மாதாநகர் சந்தனமாரியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலையில் மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, மூல மந்திரம் ஹோமம், திரவ்யாகுதி, வசுத்தாரா, வஸ்திராகுதி, மஹா பூர்ணாகுதி நடைபெற்றது.
சந்தனமாரியம்மன் திருக்கோவில் விமான கோபுரங்கள் மற்றும் மூலஸ்தானம் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகா வருஷாபிஷேக விழா நடைபெற்று மஹா தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற அன்னதானத்தை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, தொழிலதிபர் சந்தனராஜ், ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
விழாவில் தொழிலதிபர் கே.பி. செல்வா, ஒன்றிய கவுன்சிலர் முத்துமாலை, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, உமாமகேஸ்வரி, நகர கூட்டுறவு வங்கி கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், கோவில் நிர்வாகிகள் தர்மகர்த்தா முருகேசன், செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் வைகுண்டராஜா, மற்றும் பேச்சிமுத்து, கௌதம், உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.