இன்று காலை 6.35 க்கு மதுரையில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட ரயில் காலை 10.15க்கு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தது.
முன்னதாக கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கையை வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மனு கொடுத்திருந்தார். அதையடுத்து கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய மதுரை - ராமேஸ்வரம் காலை நேர பயணிகள் ரயில், ராமேஸ்வரம் - மதுரை மாலை நேர பயணிகள் ரயில்களை இன்று முதல் மீண்டும் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
2 ஆண்டுகளுக்கு பின் இயக்கப்படும் இவ்விரு வழித்தட ரயில்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், உச்சிபுளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம், சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ரயில், காலை 6.35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. நீண்ட நாளுக்கு பிறகு இந்த வழிதடத்தில் ரயில் இயக்கப்படுவதால், பலரும் பயன்பெற்றுள்ளனர்.