இலங்கை : இராணுவம் மற்றும் காவல்துறைக்கு அவசரகால அதிகாரங்கள் வழங்கி அதிபர் உத்தரவு - பிடியாணையின்றி மக்களை காவலில் வைக்க படைகளுக்கு அனுமதி.!

7 பேர் கொல்லப்பட்டு 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மோதல்கள் ஒரு பயங்கரமான திருப்பத்தை எடுத்து ஒரு நாளுக்குப் பிறகு, பிடியாணையின்றி மக்களை காவலில் வைக்க படைகளுக்கு அனுமதி அளித்து செவ்வாய்க்கிழமை இலங்கை தனது இராணுவம் மற்றும் காவல்துறைக்கு அவசரகால அதிகாரங்களை வழங்கியது. 

இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரத்தின் மூலம், மக்களை போலீஸாரிடம் ஒப்படைப்பதற்கு முன் 24 மணிநேரம் வரை அவர்கள் தடுத்து வைக்க முடியும். மேலும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவித்தலின் படி தனியார் வாகனங்கள் உட்பட தனியார் சொத்துக்களை பலவந்தமாக சோதனையிட முடியும்



Ahamed

Senior Journalist

Previous Post Next Post