"நெருக்கடியைத் தீர்ப்பதில் அமெரிக்காவும் நேட்டோவும் ஆர்வமாக இருந்தால், உக்ரைனுக்கு ஆயுதம் அளிப்பதை நிறுத்த வேண்டும்" என்று ரஷ்ய நிதியமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.
"உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பதில் அமெரிக்காவும் நேட்டோவும் உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால், முதலில், அவர்கள் விழித்தெழுந்து, உக்ரைன் ஆட்சியாளர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வழங்குவதை நிறுத்த வேண்டும்" என்று செர்ஜி லாவ்ரோவ் சீனாவின் அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ரஷ்ய உக்ரைன் போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் காங்கிரஸிடம் 33 பில்லியன் டாலர்களை கேட்டுள்ளார் . இது குறித்து ரஷ்யா "எரியும் நெருப்பில் அமெரிக்கா எண்ணெயை ஊற்றுகிறது" என்று குற்றம் சாட்டி, கெய்விற்கு இராணுவ உதவியை தொடர்வதற்கு எதிராக மாஸ்கோ வாஷிங்டனை பலமுறை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது