சில்லறை விகித பணவீக்கம் 7.79% ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் 6.95%-ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம், ஏப்ரலில் 0.84% உயர்ந்து 7.79% ஆக அதிகரிப்பு என ஒன்றிய அரசு தகவல்!

2014ம் ஆண்டு செப்டம்பருக்கு பின் இந்த அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது இதுவே முதல்முறை; தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசியே, பணவீக்க விகிதம் அதிகரிப்புக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் விளக்கம்!

பண வீக்கம் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் உந்தப்பட்டதாக அரசாங்கத் தகவல்கள் வியாழன் அன்று தெரிவித்துள்ளன. நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ந்து நான்காவது மாதமாக இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) அதிகபட்ச சகிப்புத்தன்மை வரம்பை விட அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post