ஆண்டிபட்டி அருகே 7 லட்சம் மதிப்பிலான நிழற்குடை- தேனி எம்.பி ரவீந்திரநாத் திறந்து வைத்தார்

ஆண்டிபட்டி அருகே 7 லட்சம் மதிப்பிலான நிழற்குடையை தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் திறந்து வைத்தார் .

ஆண்டிபட்டி ,

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி சமத்துவபுரத்தில் தமிழகஅரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது . இக்கல்லூரியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் . 

ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பேருந்து மூலமாக கல்விகற்க  வரும் மாணவ மாணவிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் கல்லூரிக்கு வெளியே அமைந்துள்ள வெட்டவெளி பேருந்து நிலையத்தில் காத்து இருந்து சிரமப்பட்டு வந்தனர் . 


இதையடுத்து பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டது . 

இதையடுத்து தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாயை ஒதுக்கி நிழற்குடைக்கு அனுமதி அளித்தார் . 

இதையடுத்து நடைபெற்று வந்த பணிகள் முடிவடைந்தன . இதையடுத்து நேற்று கட்டி முடிக்கப்பட்ட நிழற்குடையை கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் திறந்து வைத்தார்.  

நிகழ்ச்சியின்போது முன்னாள் தேனி  பாராளுமன்ற உறுப்பினர் சையதுகான்,   முன்னாள் கம்பம்  சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன்,ஆண்டிபட்டி மேற்கு ,கிழக்கு, ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன், தேனி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரீத்தா, தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சந்திரலேகா, ஜெயக்கொடி, உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Previous Post Next Post