தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமை காவலர் பதவியிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக 68 பேருக்கு பதவி உயர்வு வழங்கி திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். பதவி உயர்வு பெற்ற 68 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 16.04.1997 அன்று தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்து சிறப்பாக பணியாற்றி வரும் 68 பேருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக இன்று (01.05.2022) பதவி உயர்வு வழங்கி திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையில் 25 ஆண்டுகளாக சிறந்த முறையில் பணியாற்றி சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ள 68 பேருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் காவல்துறையில் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் கூறினார்.