ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ₹ 50 லட்சம் அபராதம் விதித்து, அவரது நான்கு சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு எதிராக 2005 ஆம் ஆண்டு சிபிஐ தனது முறையான வருமானத்திற்கு மாறாக 6.09 கோடி சொத்துக்களைக் குவித்ததாக வழக்குப் பதிவு செய்தது.
தண்டனைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவருக்கு கால அவகாசம் அளித்த அதே வேளையில், நீதிமன்றத்திலிருந்து சவுதாலாவை அழைத்துச் செல்லும்படி நீதிபதி உத்தரவிட்டார்.