மதத்தின் அடிப்படையில் "துன்புறுத்தல், அலட்சியம், பாரபட்சம் செய்வதாக கூறி குஜராத் முஸ்லீம் மீனவ சமூகத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர், தனக்கும் தனது மக்கள் 600 பேருக்கும் கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
போர்பந்தரில் உள்ள கோசபரா சதுப்பு நிலத்தைச் சேர்ந்த அல்லரகா இஸ்மாயில்பாய் திம்மர், வழக்கறிஞர் தர்மேஷ் குர்ஜார், மூலம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிகாரிகள் தங்களை மதத்தின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், தங்கள் படகுகளை நிறுத்த அனுமதி மறுப்பதுடன், உள் நோக்கத்துடன் தங்களது வணிக நடவடிக்கைகளில் இடையூறுகளை உருவாக்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோசபராவில் 100 முஸ்லீம் மீனவர் குடும்பங்களின் சார்பில் மனு தாக்கல் செய்யப்படுவதாக கூறும் திம்மர் - மீனவர்கள் தங்கள் படகுகளை கோசபர பந்தர் அல்லது நவி பந்தர், மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும், இல்லையெனில், மனுதாரர் மற்றும் அவரது சமூகத்தின் 600 உயிர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக முடித்துக்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கூட்டு கருணைக்கொலை (இச்சா மிருத்யு) செய்ய அவர்களின் விருப்பப்படி உத்தரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்க வேண்டும் , என்றும் அதற்க்கு சட்டம் இல்லை என்றால் அவர்களின் விருப்பப்படி.""நீதியின் நலனுக்காக" கருணைக்கொலை தொடர்பான மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்தை கோருமாறும் மனுதாரர் உயர்நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
2016 முதல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோசபரா முஸ்லிம் உறுப்பினர்களுக்கு இடையூறு மற்றும் துன்புறுத்தல் செய்வதாகவும், மச்சிமார் சமாஜ் மற்றும் அவர்களின் படகுகளை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மோசமான உள் நோக்கத்துடன் மாநில அதிகாரம் சமூக உறுப்பினர்களுக்கு, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் பார்க்கிங் உரிமங்களை வழங்குவதில்லை. கோசபரா பண்டாரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நவி பண்டாரில் படகுகளை நிறுத்த அனுமதிப்பது குறித்து அவர்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
தவிர, மனுதாரர் தங்கள் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகக் குற்றம் சாட்டினார், மேலும் அனைத்து அடிப்படை மற்றும் முதன்மை வசதிகளும் இந்து கர்வா மச்சிமார் சமாஜுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் மனுதாரரின் சமூக உறுப்பினர்களுக்கு அவர்கள் முஸ்லீம் என்பதால் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறினார்.
"மனுதாரரும் அவரது சமூகமும் தேசத்திற்கு முற்றிலும் விசுவாசமாக உள்ளனர், மேலும் அவர்கள் தங்கம், போதைப்பொருள் கடத்தல் போன்ற தேச விரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை. மாறாக, மனுதாரரும் அவரது சமூகமும் உள்ளீடுகளையும் தகவல்களையும் வழங்கியுள்ளனர். பாகிஸ்தான் மற்றும் பிற சர்வதேச ஏஜென்சிகளால் நிதியுதவி செய்யப்படும் இதுபோன்ற சட்டவிரோத தேசவிரோத நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு நிறுவனத்திற்க்கு அவ்வப்போது தகவலும் அளித்துள்ளார்”என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.