6 மணி நேரம் காத்திருப்பு - டிக்கெட்டி எடுக்க முடியமால் பரிதவித்த பயணிகள் - மயிரிழையில் உயிர் தப்பிய மூதாட்டி - கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தின் அவல நிலை.!

கோவில்பட்டி ரெயில்வே ஸ்டேஷனில் நேற்று டிக்கெட் கவுன்டரில் ஊழியர்கள் இல்லாததால் 6 மணி நேரத்திற்கும் மேலாக டிக்கெட் எடுக்க முடியமால் பயணிகள் பரிதவித்தனர். 3 ஊழியர்கள் விடுமுறையில் சென்ற நிலையில் ஒரே ஒரு ஊழியர் மட்டும் தொடர்ச்சியாக பணிபுரிந்த காரணத்தினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதால் ஊழியர் இல்லமால் கவுன்டர் மூடப்பட்டது.

மதுரை ரெயில்வே கோட்டத்தில், அதிக வருமானம் தரக்கூடிய ரெயில்வே நிலையங்களில் ஒன்று கோவில்பட்டி ரெயில்வே நிலையம், கோவில்பட்டி மட்;டுமின்றி கயத்தார்,  எட்டயபுரம், விளாத்திகுளம், அருகில் உள்ள தென்காசி மாவட்டத்தினை சேர்ந்த மக்களும் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தினை பயன்படுத்தி வருகின்றனர். 

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்யவும், முன்பதிவுல்லாத பெட்டிகளில் பயணிகள் பயணிக்கவும்  டிக்கெட் வழங்க ஒரே ஒரு கவுண்டர் தான் செயல்பட்டு வருகிறது. இதில் பணிபுரிய 4 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 ஊழியர்கள் விடுமுறையில் சென்று விட்டனர்.

 அவர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை இல்லை என்பதால் ஒரே ஒரு ஊழியர் மட்டும் தொடர்ச்சியாக 2 நாள்கள் பணிபுரிந்த காரணத்தினால் அவருக்கு திடீர் நலக்குறைவு ஏற்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னரும், டிக்கெட் கவுண்டரில் ஊழியரை நியமிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை இல்லை என்பதால் நேற்று மதியம் முதல் டிக்கெட் வழங்கும் கவுண்டர் மூடப்பட்டது. இதனால் பயணிகள் டிக்கெட் எடுக்கமுடியமால் பரிதவித்தனர். ரெயில்வே நிலையத்தில் கேட்ட போது சரியான பதிலும் கூறவில்லை. இதனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் பெறுவதற்காக டிக்கெட் கவுன்டர் முன் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தனர்.மாலை 5:45 மணி வரையிலும் டிக்கெட் கொடுப்பதற்கு எந்த ரெயில்வே ஊழியரும் வராமல் டிக்கெட் கவுன்டர் பூட்டியே கிடந்துள்ளது. சுமார் 5:50 மணியளவில் ரெயில்வே ஊழியர் ஒருவர் வந்து, அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் பணியை துவங்கினார்.ஆனால், டிக்கெட் கொடுக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் ரெயில் வந்துவிட்டதால் பயணிகள் பலரும் டிக்கெட் எடுக்க நிலை ஏற்பட்டது. இதனால் சிலர் டிக்கெட் எடுக்கமால் ரெயிலில் ஏறி சென்றனர். டிக்கெட் எடுத்தவர்கள் ரெயிலில் ஏறி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் சென்னை செல்லும் அந்தியோதயா ரயிலில் ஏறுவதற்கு 60 வயது மூதாட்டி தண்டவாளத்தினை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த தண்டவாளத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் வந்ததால் பயத்தில் தவறிவிழுந்து விட்டார். மூதாட்டி விழுந்ததை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் பொதுமக்கள், அலறியடித்துக் கொண்டு சென்று, அந்த மூதாட்டியை மீட்டு பத்திரமாக நடைமேடைக்கு கொண்டு வந்தனர். மயிரிழையில் அந்த மூதாட்டி உயிர் தப்பினார்.

கோவில்பட்டியில் இருந்து கேரளா மாநிலத்திற்கு தேர்வு எழுத செல்லும் மாணவி ஒருவர், குருவாயூர் எக்ஸ்பிரஸில் செல்வதற்கு டிக்கெட் கிடைக்காததால், டிக்கெட் எடுக்காமலேயே பயணம் செய்ய நேரிட்டது. இந்த ரயிலில் ஏறாமல் விட்டால் என்னால் நாளை நடக்கும் தேர்வு எழுத முடியாது. அதனால், அபராத தொகை செலுத்தினாலும் பரவாயில்லை, டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறப் போகிறேன் என்று கூறிவாறே, அந்த மாணவி குருவாயூர் ரயிலில் ஏறிச் சென்றார்.

ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் மூலமாக பயணித்து வரும் நிலையில் தொடர்ச்சியாக ரெயில்வே நிர்வாகம் இது போன்று அலட்சியமாக செயல்பட்டு வருவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post