"50 ஆண்டு கால ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும்" - தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்திற்க்கு முன்னாள் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை.!

 

தூத்துக்குடி எட்டையாபுரம் சுசி பல்க் முதல் சாமுவேல்புரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வரையில்  உள்ள மெயின் சாலை 60 அடி அகலம் கொண்டு அமைந்துள்ளதால் இச்சாலை  மாநகரின் பிரதான சாலைகளில் ஒன்றாகியுள்ளது. இதில் கிருஸ்னராஜபுரம் 9வது தெரு முதல் மாணிக்கபுரம் சந்திப்பு வரையில் உள்ள சாலை மட்டும் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக  20 அடி சாலையாகவே மக்கள் பயன்பாட்டிற்கு செயல்பாட்டில் உள்ளது. முடங்கி கிடக்கும் 40 அடி சாலையை மீட்டெடுக்க  பலமுறை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் முன் வந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி நில அளவை கணக்கீட்டின் படி சர்வே செய்து  ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் வரையறையும் செய்துள்ளது. இதில் பல்வேறு அதிகார  தலையீடுகள் மறைமுகமாக   அவ்வப்போது செயல்பட்டு வந்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்   தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பிரச்சினை நீதிமன்றம் வரை சென்று, இன்றைய நாள் வரையிலும்  முற்று பெறாமாலையே செயல்பாட்டில்  உள்ளதாக தெரியவருகிறது.. .

இந்த கால சூழ்நிலையில் 60 அடி சாலையின் கரையோரம் ஸ்மார்ட் சிட்டி  நிதியின் கீழ்  மழை நீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தொடங்கிய இப்பணி அடுத்த மழை காலங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதற்காக அதிவிரைவாகவும் செயல்பட்டது. அதன் படி   எட்டையாபுரம் சாலை சுசி பல்க் முதல் தொடங்கி திரேஸ்புரம் கடற்கரை வரையில்  விரைந்து முடிக்கப்பட்டும் உள்ளது.

ஆனால் இதில் கிருஸ்னராஜபுரம் 9வது தெரு பகுதியில் மட்டும் இப்பணியை தொடங்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறியது. இங்குள்ள 60 அடி சாலையில் 

40 அடி சாலை மட்டும்  முழுமையாக
ஆக்கிரமித்துள்ளது. இதனால்  மழை நீர் வடிகால் அமைக்கும் பணி முழுமையாக முடிக்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டது.

இதை அறிந்த பொதுமக்கள் அதிரடியாக மேற்கொண்ட முயற்சிக்கு மாநகராட்சி ஆணையாளரும் துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ள வழி வகை செய்தார். அதன்படி ஆணையாளரின் பரிந்துரையின் கீழ் இப்பகுதியில் உள்ள  ஆக்கிரமிப்புகள் முழுவதும்  அதிரடியாக இடித்தும் தள்ளப்பட்டது. இதில் இப்பகுதியை சார்ந்த சென்ட் தாமஸ் ஆசிரியர் பயிற்சி பள்ளி உள்ப்பட ஒரு சிலருக்கு பாத்தியப்பட்ட இடங்கள் மட்டும் இடிப்பதில் இருந்து விலக்கு அளித்து  பாதுகாக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரப்பட்ட இப்பகுதி சார்ந்த  பொதுமக்கள் , ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு நீதியையும் , அதிகாரம் படைத்தவர்களுக்கு மற்றொரு நியாயத்தையும் வழங்கி வருவதாக குற்றம் சுமத்தி வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரை முன்னாள் கவுன்சிலர் சென்பகச்செல்வன் தலைமையில் பொதுமக்கள் நேரில் சந்தித்து ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றிட நடவடிக்கை எடுத்திடக் கோரி மனு ஒன்றையும் வழங்கி உதவி கேட்டுள்ளனர்.

கலந்து கொண்டவர்கள் கூறியதாவது.

இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம்  ஒரு தலைபட்சமாக செயல்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஆழமாக எழுந்துள்ளது. ஆதரவற்ற ஏழை எளிய மக்களின் குடி இருப்புகளை அதிரடியாக உடைத்து தள்ளினார்கள். ஆனால் சென்ட் தாமஸ் ஆசிரியர் பயிற்சி பள்ளி மதில் சுவர் உள்ப்பட ஒரு சிலரின் வீடுகள் இடிக்கப் படவில்லை. நீதிமன்றத்தின் வாயிலாக கால அவகாசம் கேட்டு இருப்பதால் இவர்களது வீடுகள் விட்டு கொடுக்கப்பட்டு இருப்பதாக விபரமறிந்தவர்கள் தகவல் சொல்கிறார்கள். நீர் வழிப் பாதை மற்றும் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால்  அதை மீட்டெடுக்க அரசாணை உள்ளதாக நாங்கள் அறிகிறோம். அப்படி இருக்கும் போது மழை நீர் வடிகால் அமைப்பதற்கும் , 40 அடி சாலையை மீட்டெடுப்பதற்கும் மாநகராட்சி நிர்வாகம் ஏன் பின்வாங்கி நிற்கிறது என்று எங்களுக்கு புரியவில்லை என்கின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில்: - இந்த பகுதியில் உள்ள ஏனைய வீடுகளை எல்லாம்  இடிக்காமல் விட்டுட்டு, இப்பிரச்சினையை மொத்தமாக முடிவுக்கு கொண்டு வந்து இருக்கலாம். ஆனால் அதை எல்லாம் இவர்கள் செய்ய முன்வராமல் அவசரப்பட்டு ஒரு சில வீடுகளை மட்டும் உடைத்து விட்டு ஒரு சில வீடுகளையும்,  இடங்களையும் பாதுகாப்பது அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவே தெரியவருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடுநிலையான முடிவுகளை   சட்ட ரீதியாக மேற்கொண்டு இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிட முன் வரவேண்டும். அதைப் போலவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிய பின்னரே இங்கு மழை நீர் வடிகாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் ஆவனம் செய்ய வேண்டும்.

இவைகளை செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன் வரவில்லை என்றால் இங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இப்பகுதியில் நடைபெறுகின்ற ஸ்மார்ட் சிட்டி பணிகளை எல்லாம் நடைபெறவிடாமல் தடுத்து நிறுத்துவோம் , மழை நீர் வடிகால் அமைப்பதை திசை திருப்பி செயல்படுத்த முயற்சிப்பதையும் விரட்டியடிப்போம் என்றனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post