ஆபரேஷன் நம்கீன் -உப்பு பாக்கெட்டுகளில் மறைத்து ரூ.500 கோடி கோகைன் கடத்தல்.! - குஜராத் அதானி துறைமுகத்தில் பறிமுதல்.!

 

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் நேற்று 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கிட்டத்தட்ட 52 கிலோ கோகோயின் பிடிபட்டது. உப்பு அடங்கிய பாக்கெட்டுகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"நம்கீன் நடவடிக்கை"யின் கீழ், 25,000 கிலோ எடையுள்ள சுமார் 1,000 மூட்டைகள் கொண்ட சாதாரண உப்பு அடங்கிய ஒரு சரக்கு ஆய்வு செய்யப்பட்டு, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) அதிகாரிகளால் கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்தாண்டு செப்டம்பரில் முந்த்ரா துறைமுகத் திற்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதை பொருள் சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி இந்தியாவில் இதற்கு முன் இந்தளவுக்கு பெரியளவில் போதை பொருள் பறி
முதல் செய்யப்பட்டது கிடையாது.

ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து உலகின் மிகப் பெரிய பணக்காரராக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான அதானிக்கு சொந்தமானதுதான் இந்த முந்த்ரா துறைமுகம்.

இந்த முந்த்ரா .துறைமுகத்தின் மூலமாக சர்வதேச நாடுகளுக்கு போதைபொருட்கள் கடத் தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து. இம்மாநில துறைமுகங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்களில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருட் கள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது.

சமீபத்தில், அமரேலி மாவட்டத்தில் உள்ள பிபவாவ் துறைமுகத்தில்  ரூ.450 கோடி மதிப்புள்ள 90 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.  கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்டலா துறைமுகத்தில் கடந்த மாதம் 260 கிலோ ஹெராயின் சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1,300 கோடி.

இந்நிலையில், வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், முந்த்ரா துறைமுகத்தில் வைக்கப்பட்டு உள்ள கன்டெய்னர்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஒரு கன்டெய்னரில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டு இருந்து பொருட்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 52 கிலோ கோகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.500 கோடி.

கடந்தாண்டு செப்டம்பரில் ஈரானில் இருந்து வந்த சரக்கு கப்பலில் இந்த கன்டெய்னர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சோதனையில் இதை விட பெரியளவில் போதை பொருட்கள் சிக்கி இருப்பதாக சந்தேகிக்கப்படு கிறது. ஆனால், அது பற்றிய விவரங்களை தெரிவிக்க வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post