டெல்லி : குதுப்மினார் பெயரை 'விஷ்ணு ஸ்தம்பம்' என மாற்றக் கோரி ஹிந்து அமைப்பினர் திடீர் போராட்டம் - 44 பேர் கைது.!

குதுப்மினார் பெயரை 'விஷ்ணு ஸ்தம்பம்' என மாற்றக் கோரி குதுப்மினாரில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய ஐக்கிய இந்து முன்னணி மற்றும் ராஷ்டிரவாதி சிவசேனாவைச் சேர்ந்த 44 உறுப்பினர்களை டெல்லி காவல்துறை கைது செய்தது.

ஆர்ப்பாட்டத்தின் போது, வலதுசாரி குழுக்களின் உறுப்பினர்கள் குதுப்மினார் வளாகத்திற்கு வெளியே ஹனுமான் சாலிசாவை வாசித்தனர். அவர்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிட்டனர் மற்றும் தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான நினைவுச்சின்னத்தின் பெயரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குதுப்மினார் "மன்னர் விக்ரமாதித்யனால்" கட்டப்பட்டது என்றும்,ஆனால் பின்னர், குதுபுதீன் ஐபக் அதற்கு சொந்தம் கொண்டாடினார்,. "இந்த வளாகத்தில் 27 கோவில்கள் இருந்தன, அவை ஐபக்கால் அழிக்கப்பட்டன. குதுப்மினார் வளாகத்தில் இந்து கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதை மக்கள் கண்டுபிடிப்பதால் இவை அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. குதுப்மினார் விஷ்ணு ஸ்தம்பம் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை," என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்,

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான இந்த வளாகத்தில் வெவ்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக கோயல் கூறினார், அதே நேரத்தில் அவற்றை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய இந்து முன்னணியின் சர்வதேச செயல் தலைவர் பகவான் கோயலை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம், டெல்லி நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும் வரை குதுப்மினார் வளாகத்தில் இருந்து இரண்டு விநாயகர் சிலைகளை அகற்ற வேண்டாம் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிட்டது.


 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post