டெல்லி விமான நிலையத்தில் ரூ. 33 கோடி தங்கம் பறிமுதல்.! - பைப்புக்குள் மறைத்து இறக்குமதி செய்த பலே கில்லாடிகளுக்கு வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வலை.!

டெல்லி விமான நிலைய ஏர் கார்கோ வளாகத்தில் குடிநீர் குழாய் என இறக்குமதியான சரக்கை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட வருவாய் புலனாய்வு அதிகாரிகள், குழாய்க்குள் மறைத்து எடுத்து வரப்பட்ட  ரூ.32.5 கோடி சந்தை மதிப்பு கொண்ட 61.5 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

'கோல்டன் டேப்' என்ற ரகசிய உளவுத்துறை நடவடிக்கை குறியீட்டில், வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் (டிஆர்ஐ) அதிகாரிகள், அதில் மறைத்து தங்கம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மே 11 புதன் அன்று சரக்குகளை மடக்கிப் பிடித்தனர்.

சோதனையில் முக்கோண குடிநீர் பைப் வால்வுகளைக் கொண்டதாக அறிவிக்கப்பட்ட சரக்கு, சீனாவின் குவாங்சோவில் இருந்து , ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தை வந்தடைந்தது.

வியாழன் அதிகாலை வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முழுமையான மற்றும் நீண்ட சோதனைக்குப் பிறகு, இறக்குமதி செய்யப்பட்ட முக்கோண வால்வுகளில் அதிக எண்ணிக்கையில் 24 காரட் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிர சோதனைக்குப் பிறகு, டிஆர்ஐ அதிகாரிகள் சரக்குகளில் இருந்து ரூ.32.5 கோடி சந்தை மதிப்புள்ள 61.5 கிலோகிராம் தங்கத்தை மீட்டனர். மீட்கப்பட்ட தங்கம் 99 சதவீதம் தூய்மையானது எனக் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என வருவாய் புலனாய்வுத் துறை அறிக்கையில் கூறினர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post