சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரயில்வே, நெடுஞ்சாலை, தொழில்துறை உள்ளிட்ட துறைகளின் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைத்தார். இதில், ரூ.2,900 கோடி மதிப்பிலான, ஐந்து திட்டங்களை, பிரதமர் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
அத்துடன், ரூ.28,500 கோடி மதிப்புள்ள, ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக வரவேற்புரை ஆற்றிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:
தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். நமது பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை தமிழக மக்கள் சார்பாக வரவேற்கிறேன். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள நாடாக திகழ்கிறது. கொரோனா காலகட்டத்திலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் இருந்தது.
அக்காலக்கட்டத்தில் பொருளாதாரத்தை காத்தவர் மோடி. புதிய கல்விக்கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும். டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களுக்காக நன்றி. தமிழகத்தில் சாலை, ரயில்வே திட்டங்கள் மூலம் அடிப்படை கட்டமைப்புகளை பிரதமர் மேம்படுத்துகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
முடிவுற்ற 5 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த திட்டங்கள்:
75 கி.மீ தூரமுள்ள மதுரை - தேனி இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதை.
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 3வது ரயில் பாதை.
எண்ணூர் - செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ தூரத்துக்கு குழாய் வழியே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் திட்டம்.
பெங்களூரு - திருவள்ளூர் பிரிவில் 271 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள குழாய் வழியே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் திட்டம்.
கலங்கரை விளக்கம் செயல் திட்டத்தின் கீழ் அந்த சுற்றுவட்டாரத்தில் குடியிருப்போருக்காக கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளையும் பயனாளிகளுக்கு ஒப்படைக்கிறார்.
இதே விழாவில் 6 பிரமாண்டமான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அந்த திட்டங்கள்:
சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் திட்டங்களுக்கு அடிக்கல்.
சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை அருகே மப்பேட்டில் பன்மாதிரி போக்குவரத்து பூங்கா (மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்) அமைப்பதற்கான அடிக்கல்.
துறைமுகம்-மதுரவாயல் இடையே அமைக்கப்படும் இரண்டடுக்கு
சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைவு வழி சாலை
பெங்களூரு - தர்மபுரி இடையே 4 வழிச்சாலை அமைத்தல்.
மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை 32 கி.மீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில்தனி பாதைகள்.