விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 200/- அபராதமும் தண்டனையாக வாங்கி கொடுத்த விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு, உதவி ஆய்வாளர் தேவராஜ், முதல் நிலை காவலர் ராமன் மற்றும் காவலர் கோட்டிமுத்து ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணை கடத்திய வழக்கு மற்றும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ, பெண்ணை கடத்தி சென்ற வழக்கு, வரதட்சணை வழக்கு ஆகிய வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 4 பேரை கைது செய்த தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் மோகன் மற்றும் மத்தியபாகம் தலைமை காவலர் பழனிச்சாமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போக்சோ, குழந்தை திருமணம் போன்ற 8 வழக்குகளில் சம்மந்தப்பட்டு தலைமறைவாகி கைது செய்யப்படாமல் நீண்ட காலம் நிலுவையில் இருந்த வழக்குகளின் எதிரிகளை கடந்த ஒரே மாதத்தில் (ஏப்ரல்) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கௌரிமனோகரி, உதவி ஆய்வாளர் மேரி, தலைமை காவலர்கள் கல்பனா மற்றும் செபஸ்டின் சுகந்தி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற சந்தேக மரண வழக்கில் விசாரணை மேற்கொண்டு கொலை வழக்காக பதிவு செய்து எதிரியை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் காவல்துறை தொலைதொடர்பு மைக் மூலமாக மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களின் முக்கிய வழக்குகளின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, அவ்வழக்குகளின் விவரங்கள் குறித்து முறையாகவும், தெளிவாகவும் பதிலளித்த மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகபெருமாள், புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாராபர்ட் மற்றும் பசுவந்தனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீத்தாராம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு பழிக்குபழியாக நடைபெற்ற கொலை வழக்குகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல் முருகன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு பழிக்குபழியாக நடைபெற்ற கொலை வழக்குகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராபின்ஸ்டன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் 3 வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 5 பேரை கைது செய்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர்கள் காமராஜ், விஜயகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணசங்கர், தலைமை காவலர் கோதண்டராமன் மற்றும் முதல் நிலை காவலர் சித்திரவேல் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் எதிரியை அடையாளம் கண்டு கைது செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிரடரிக் ராஜன், நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், தட்டார்மடம் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் காசி, புதூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் பிரபுபாண்டியன் மற்றும் ஆயுதப்படை காவலர் முருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூததுக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பு மற்றும் மில்லர்புரம் சந்திப்பு பகுதிகளில் சிறந்த முறையில் போக்குவரத்தை சீர் செய்த தூத்துக்குடி தெற்கு போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் பாலமுருகன் மற்றும் முதல் நிலை காவலர் கணேசன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 பேரை காரில் கடத்தில் சென்ற வழக்கில் எதிரிகள் 5 பேரை விரட்டி சென்று கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்ய உதவியாக இருந்த புளியம்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் சக்திநாதன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
CCTNSல் பதிவு செய்தல் மற்றும் தொலைந்த போன வாகனங்களை கண்டுபிடித்தல் போன்ற பணிகளை திறம்பட செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் மேரி கலா மற்றும் எட்டையாபுரம் காவல் நிலைய முதல் நிலைய காவலர் பாக்கியலெட்சுமி ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும், 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 37 பேரின் சிறந்த சேவையை பாராட்டி வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.